கடல் தாண்டி வசிக்கும் காரைக்குடி மக்களின் மாட்டு வண்டி பயணம்

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மேலுார் : மதுரை மாவட்டம், அழகர்கோவில் ஆடித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள, வெளிநாடுகளில் வசிக்கும் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்தனர்.காரைக்குடி, கே.வேலங்குடி கிராமத்தினர் அழகர் கோவிலில் ஆக.12 ல் நடக்கும் தேரோட்டத்திற்காக ஆக., 7ல் மாட்டு வண்டிகளில் புறப்பட்டனர். அவர்களுடன் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோரையும் அழைத்துச்
மாட்டு வண்டி பயணம், அழகர் கோவில், அழகர் கோவில் தேரோட்டம், Alagar kovil, Alagar kovil therottam,

மேலுார் : மதுரை மாவட்டம், அழகர்கோவில் ஆடித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள, வெளிநாடுகளில் வசிக்கும் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்தனர்.

காரைக்குடி, கே.வேலங்குடி கிராமத்தினர் அழகர் கோவிலில் ஆக.12 ல் நடக்கும் தேரோட்டத்திற்காக ஆக., 7ல் மாட்டு வண்டிகளில் புறப்பட்டனர். அவர்களுடன் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோரையும் அழைத்துச் சென்றனர். இன்று அழகர் கோவிலை அடைகின்றனர்.

ஆக., 11ல் முடி காணிக்கை செலுத்திய பிறகு கிடா வெட்டி பொங்கல் வைப்பர். ஆடி 12ல் தேர் இழுத்தபின், சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.பயண ஒருங்கிணைப்பாளர் செல்வமணி கூறியதாவது:நுாற்றாண்டுகளுக்கும் மேலான முன்னோர் பாரம்பரியத்தை கடைபிடிக்கவே மாட்டு வண்டிப் பயணத்தை மேற்கொள்கிறோம். இதில் கலந்து கொள்ள சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்பட பல வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோம்.

இந்தப் பயணத்திற்காகவே வண்டிகள் தயாரித்து, மாடுகள் வாங்கி பாரம்பரிய வழக்கத்தை விடாது கடைபிடிக்கிறோம். பொருளாதாரம், பழக்க வழக்கங்களில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இப்பயணத்தை விரும்பி தொடர்கிறோம். இதன்மூலம் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிப்பதோடு மனதுக்கு அமைதியும் கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M. SHAHUBARSATHIK - Pudukkottai,இந்தியா
11-ஆக-202207:07:27 IST Report Abuse
M. SHAHUBARSATHIK வாழ்த்துகள்
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
10-ஆக-202219:25:50 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது நல்ல செயல். காங்கயத்தில் உள்ள நான் அலுவலக பணிகளோடு ஒரு காங்கேய நாட்டு மாடு வளர்க்கிறேன். காங்கேய மக்கள் அனைவரும் ஒரு காங்கேய நாட்டு மாடு வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
10-ஆக-202213:10:47 IST Report Abuse
ஸ்டிக்கன் 1 வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X