வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பிரதமரின் கோரிக்கையை ஏற்று, கேரள திரையுலகினர் அவரவர் சமூக வலைதள பக்கங்களில், முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தமிழ் நடிகர், நடிகையர், அதை புறக்கணித்துள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வேளையில், சமூக வலைதளங்களில் உள்ளவர்கள், அவரவர் முகப்பு படத்திற்கு பதிலாக, தேசிய கொடியை இடம்பெற செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று, கேரள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலர், தேசிய கொடியை வைத்துள்ளனர்.

பாலிவுட்டில் அக் ஷய்குமார், அஜய் தேவ்கன், ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர், முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.ஆனால், தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன், நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட சிலர் மட்டுமே, முகப்பு படத்தை மாற்றியுள்ளனர். பெரிய நடிகர்கள், நடிகையர் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.