மின் கட்டண உயர்வு: வாங்க... உட்கார்ந்து பேசலாம்; தொழில்துறையினருக்கு அமைச்சர் அழைப்பு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை: மின் கட்டண உயர்வை எதிர்த்து, கோவை தொழில் அமைப்புகள் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக பேசி தீர்வு காண, அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ மற்றும் எஸ்எல்டி ஆகிய மின்வாரிய அமைப்புகள் பரிந்துரைகளை முன்வைத்தன. மேலோட்டமாக பார்த்தால், தாழ்வழுத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: மின் கட்டண உயர்வை எதிர்த்து, கோவை தொழில் அமைப்புகள் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக பேசி தீர்வு காண, அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ மற்றும் எஸ்எல்டி ஆகிய மின்வாரிய அமைப்புகள் பரிந்துரைகளை முன்வைத்தன. மேலோட்டமாக பார்த்தால், தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில் துறையினருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் 6.35 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாகவும், உயர் அழுத்த மின் கட்டணம் 6.35 ரூபாயிலிருந்து 6.75 பைசாகவும் உயர்த்துவதாக இருக்கும் என, எதிர்பார்த்த தொழில்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



latest tamil news




ஆனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் பயன்படுத்தப்படும் கட்டண விகிதமான உயர் மின்னழுத்த நுகர்வோர் டாரிப் 1 மற்றும் தாழ்வு மின்னழுத்த டாரிப் 3பி ஆகியவற்றில், நிலையான கட்டணம், டிரான்ஸ்மிஷன் சார்ஜ், பீக் அவர் சார்ஜ், மல்டிஇயர் சார்ஜ், பிக்சட் சார்ஜ் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்ததை, தொழில் துறையினர் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, நேற்று நமது நாளிதழில் அனைத்து தொழில் அமைப்புகளின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம்.கோவையில் தங்கியிருந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியை படித்ததும் நேற்று காலையிலேயே, தொழில்துறையினரை சந்திக்க அழைப்பு விடுத்தார்.
கொடிசியா தலைவர் திருஞானம், முன்னாள் தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் சசிக்குமார், டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுப்ரமணியம், காட்மா சிவக்குமார், சீமா தலைவர் விக்னேஷ், ஐஐஎப் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னை சென்றவுடன் இந்த அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள், சென்னையில் உள்ள மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்ய ஏற்பாடு செய்கிறேன். மின் கட்டண விவகாரத்தில் பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம்," என, தெரிவித்துள்ளார்.இதனால், தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்க சமயத்தில் பிரச்னையின் வீரியத்தை அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்ற, நமது நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
10-ஆக-202211:52:29 IST Report Abuse
Indhuindian டீலா நோ டீலா
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
10-ஆக-202209:50:28 IST Report Abuse
Manikandan Sivalingam தமிழகத்தில் தொழில் நடத்த வசதியும் தகுதியும் திறமையும் வாய்ந்தவன்.. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் குறித்த காலத்தில் வழங்க தகுதி இல்லாத நபர்கள் நடந்தும் அரசாங்க சலுகைக்காக எதிர்பார்த்து தொழில் நிறுவனங்களால் நாட்டிற்கு எவ்விதமான நன்மையும் கிடையாது. தொழில் நிறுவனங்கள் நடத்துவது என்பது ஆட்டோ ஓட்டும் வேலை அல்ல......
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
10-ஆக-202209:35:01 IST Report Abuse
Duruvesan கட்டிங் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X