அரசு தேர்வில் வெற்றி பெற்று தாய், மகன் அசத்தல்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
மலப்புரம்: கேரளாவில் தாயும், மகனும் அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ), இவரது மகன் விவேக் (24). பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். விவேக் கல்லூரி படிப்பு முடித்ததும், தாயும், மகனும் சேர்ந்து அரசு
Kerala, Mother_Son, PSC exam, Malappuram, Cleared, Public Service Commission, Examination, Together

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மலப்புரம்: கேரளாவில் தாயும், மகனும் அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ), இவரது மகன் விவேக் (24). பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். விவேக் கல்லூரி படிப்பு முடித்ததும், தாயும், மகனும் சேர்ந்து அரசு தேர்வுகள் எழுத விரும்பியுள்ளனர். இதனையடுத்து இருவரும் இணைந்து பயிற்சி மையத்திற்கு சென்று படித்து வந்த நிலையில், தற்போது அரசு பணியாளர் தேர்வில் இருவரும் ஒன்றாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.


latest tamil news


இது குறித்து பிந்துவின் மகன் விவேக் கூறுகையில், ‛நானும் அம்மாவும் பயிற்சி வகுப்புக்கு ஒன்றாக சென்றோம். அப்பா எங்களுக்கு பயிற்சி பெறுவதற்கான எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்தார். எங்களது ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். இருவரும் ஒன்றாக படித்தோம், ஆனால் ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என நினைக்கவில்லை. இருவரும் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஆக-202220:15:08 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் அம்மா, மகன் இருவருக்கும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-ஆக-202216:59:40 IST Report Abuse
Vena Suna 42 வயதில் அரசு வேலையா? ம்ம்ம்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஆக-202216:42:43 IST Report Abuse
Vijay D Ratnam பிரசவத்தின் போது சொல்லும் அதே வார்த்தையைத்தான் இப்போது அரசு தேர்வில் வெற்றி பெற்ற இருவருக்கும் சொல்லவேண்டும். தாயும் சேயும் நீடுழி வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X