டில்லியில் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கு என்பது, கண்டிப்பாக பெருமைக்குரிய விஷயம் அல்லவே!

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களில், டில்லியில் கடந்த ஏழு மாதங்களில், 1,100 பெண்கள் பலாத்காரம், 2,704 பேர் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்படுத்தப்பட்ட, 'நிர்பயா' நிதி வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது வெத்து விளம்பரத்திற்கே
பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், செல்வப்பெருந்தகை,

சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களில், டில்லியில் கடந்த ஏழு மாதங்களில், 1,100 பெண்கள் பலாத்காரம், 2,704 பேர் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்படுத்தப்பட்ட, 'நிர்பயா' நிதி வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது வெத்து விளம்பரத்திற்கே பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

'நிர்பயா' நிதி விவகாரம் இருக்கட்டும்... நாட்டின் தலைநகரான டில்லியில், இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கு என்பது, கண்டிப்பாக, பெருமைக்குரிய விஷயம் அல்லவே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடனை கட்டாததற்காக, தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த, கடலுார் மாவட்டம், அனுபவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, அவர்கள் வாழ்வு மேம்பட கடனுதவி செய்வதாக, மாநில அரசு தம்பட்டம் அடித்து கொள்வது எல்லாம் நிஜமில்லையா?எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத் தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி:
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. வட மாநிலங்களில், தாய் மொழியில் ரயில்வே தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதால் தான், ரயில்வே துறையில், அதிகமான வட மாநிலத்தவர்கள் பணியில் இணைகின்றனர்.

நம்ம ஊர்ல தமிழ்ல தேர்வு எழுத அனுமதித்தாலும், எத்தனை பேருக்கு அட்சர சுத்தமா தமிழ் எழுத, படிக்க வரும்னு நினைக்கிறீங்க?latest tamil news


பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழக அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை, பாதுகாப்பாக வைக்க போதுமான, கொள்முதல் நிலையங்கள் இல்லை. எனவே, திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்படும் நெல் மூட்டைகள், மழை காலங்களில் நனைந்து, அழுகி வீணாகின்றன. அதனால் தான், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது.

அப்படி இருந்தால் தானே, அந்த அரிசியை மக்கள் வாங்க மாட்டாங்க... அதை கடத்தி, 'பாலிஷ்' பண்ணி வெளி மாநிலங்களுக்கு விற்க முடியும்?தமிழக முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
ஐ.டி., நிறுவனங்களில் வணிக ரீதியான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, அந்த நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்து பணியாற்றுகின்றனர். இதற்கு வீட்டு உபயோக மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் மின் கட்டணம் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்யும் வகையில் ஐ.டி., நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஐ.டி., நிறுவனங்களுக்கு வாடகை, 'ஏசி' பயன்பாடு மிச்சம் என, 'பெத்த லாபம்' இருக்குதே... அதனால், அவங்க ஊழியர்களை திரும்ப ஆபீசுக்கு அழைப்பது சந்தேகம் தான்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan P - hosur,இந்தியா
10-ஆக-202213:17:10 IST Report Abuse
Nagarajan P thaai மொழியில் கற்போருக்கு தெரியும் அந்த பெருமை , ரயில்வே எக்ஸாம் தமிழில் எழுதினால் ஏற்படும் சமத்துவம்.
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
10-ஆக-202212:41:06 IST Report Abuse
S Regurathi Pandian டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கைகளில் உள்ளது.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-ஆக-202212:06:44 IST Report Abuse
Rafi முக்கிய வழக்குகள் ஒரு குறிப்பிட்ட நீதிபதிகள் வசம் மட்டுமே விசாரிக்கும் நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று மூத்த வழக்கறிஞர்கள், மற்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டியது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X