தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள் விற்பனை : முதல்வர் ஸ்டாலின் கவலை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (103) | |
Advertisement
சென்னை: போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் இன்று (ஆக.,10) ஆலோசனை மேற்கொண்டார்.அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில், போதைப்
DMK, Tamilnadu CM, Stalin, TN, Tamilnadu, தமிழகம், தமிழ்நாடு, தி.மு.க, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் இன்று (ஆக.,10) ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்படுபவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க, நம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகிவிடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.


latest tamil news



போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை; போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
11-ஆக-202205:26:36 IST Report Abuse
Bharathi சாராய கொள்முதல நிறுத்திட போறீங்கன்னு பாலு தப்பா நினைச்சி கோபிச்சிக்கப்போறாரு
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஆக-202220:05:58 IST Report Abuse
Ramesh Sargam இப்படி முதலை கண்ணீர் கவலை எல்லாம் வேண்டாம் தலைவரே. காவல் துறைக்கு அப்படிப்பட்ட போதைப்பொருள் விட்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க நீங்கள் உத்தரவிடவேண்டும். காவல்துறை அப்படி தண்டிக்கும் போது எந்தவொரு அரசியல்வாதிகள் தலையீடும் இருக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
10-ஆக-202220:04:26 IST Report Abuse
ram மொத்த வியாபாரிங்களே நீங்கதானே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X