2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆத்தூர் : ஆத்தூர் பகுதியில், இன்று (ஆக.,10) அதிகாலையில் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர பகுதியில், நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ரேஷன் அரிசி கடத்துவதாக, சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்க்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், ஆத்தூர், கண்ணாடி மில், தெற்கு காடு, வ.உ.சி., நகர்,
ரேஷன் அரிசி, ஆத்தூர் , ரேஷன் அரிசி கடத்தல், Ration rice, Athur,

ஆத்தூர் : ஆத்தூர் பகுதியில், இன்று (ஆக.,10) அதிகாலையில் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர பகுதியில், நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ரேஷன் அரிசி கடத்துவதாக, சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்க்கு புகார் சென்றது. அவரது உத்தரவுபடி, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், ஆத்தூர், கண்ணாடி மில், தெற்கு காடு, வ.உ.சி., நகர், புதுப்பேட்டை ஆகிய பகுதியில் ஆய்வு செய்தனர். இன்று, அதிகாலை, 2 மணியளவில், கண்ணாடி மில் அருகில் மினி சரக்கு வேனில் ஆய்வு செய்தனர். அதில், 63 மூட்டைகளில், மொத்தம் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அந்த மினி வேனை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


latest tamil news


மேலும், ஓமலூர், கல்திட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் முரளி, 27, ஆத்தூர், பகுதியை சேர்ந்த, ராஜா, 41, மற்றும் கேசவன் 45. சேலம், கொண்டலாம்பட்டி மணிகண்டன், 40 ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுவினரிடம் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
10-ஆக-202213:31:06 IST Report Abuse
GANESUN அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களிடம் ஒப்படைத்தனர், இவர்கள் அவர்களுக்கு ஜாமின் வழங்கினர்.. அவர்கள் நிம்மதியாக மீண்டும் அரிசி கடத்தலில் ஈடுபட்டனர்..இதை படித்த கேனைகள் அவர்களுக்கே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X