பங்குச்சந்தைகள் மந்தம் : சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | |
Advertisement
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து, 58,863 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து,17,533 புள்ளிகளுடன் துவங்கியது. நெஸ்லே, எஸ்.பி.ஐ லைப் இன்சூரன்ஸ், சிப்லா,
Sensex, Nifty, Market Update, சென்செக்ஸ், நிஃப்டி, சந்தை நிலவரம், inflation, Consumer Price index


மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கியது.


இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து, 58,863 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து,17,533 புள்ளிகளுடன் துவங்கியது. நெஸ்லே, எஸ்.பி.ஐ லைப் இன்சூரன்ஸ், சிப்லா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்.சி.எல், இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு கண்டன.
கேப்பிடல் நிறுவன பங்குகள் 1 சதவீதம் உயர்வு கண்டன. ஐ.டி நிறுவன பங்குகள் 1 சதவீதம் சரிவை கண்டன. நண்பகல் 12 மணிநிலவரப்படி, ஏற்றம் இறக்கம் காரணமாக சென்செக்ஸ் 109 புள்ளிகளும், நிஃப்டி 28 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


சில்லறை பணவீக்கம் எப்படி இருக்கும் ?

உணவு மற்றும் எரிபொருள் விலை குறைவால், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏழாவது மாதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பை விட அதிகமாக இருக்குமென ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


நுகர்வோர் விலை குறியீடு ஜூலையில் 6.78 சதவீதமாக இருக்குமென கூறப்பட்டுள்ளது. ஜூனில் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 7.01 சதவீதமாக இருந்தது. மேலும் மொத்த விலை பணவீக்கம் ஜூனில் 15.18% ஆக இருந்த நிலையில், ஜூலையில் 14.20% ஆக குறையுமென கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X