75வது சுதந்திரம் தினம்: காங்., எம்எல்ஏ தலைமையில் பாதயாத்திரை

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை: இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற 75வது பவள விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை காங்., எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் 5 நாள் பாதை யாத்திரையை துவங்கினர்.இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்., கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லக்கூடிய பாதை யாத்திரை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.,
75வது சுதந்திரம் தினம்: காங்., எம்எல்ஏ தலைமையில் பாதயாத்திரை

மயிலாடுதுறை: இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற 75வது பவள விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை காங்., எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் 5 நாள் பாதை யாத்திரையை துவங்கினர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்., கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லக்கூடிய பாதை யாத்திரை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ., ராஜகுமார் தலைமையில் துவங்கியது. மயிலாடுதுறை சுதந்திர போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபத்தில் உள்ள வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பாத யாத்திரையைத் துவங்கினார். அவருடன் திரளான காங்கிரஸ் கட்சியினரும் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
இந்த பாதயாத்திரை முதலாவது நாளாக சிலை அருகில் இருந்து புறப்பட்டு குத்தாலத்தை அடைகிறது. நாளை 11ம் தேதி குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணமேடு சென்றடைகிறது. ஆக.,12ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு பெரம்பூருக்கும், ஆக.,13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடத்தை அடைகிறது.ஆக.,14ம் தேதி கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக சீர்காழியை வந்தடைகிறது. சீர்காழியில் எம்எல்ஏ ராஜ குமார், தலைவர்களின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மண்டபத்தை திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைத்து பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
10-ஆக-202213:31:55 IST Report Abuse
a natanasabapathy Ozhalil uriya peruchalikal urvalam senru makkalai yemaarrukinrana
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X