பீஹாரில் அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பும்: புதிய அரசு குறித்து பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்கிறார். இதன்மூலம் பீஹாரில் அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பும் என நம்புவதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் பீஹார் முதல்வர்
Bihar, Poll Strategist, Prashant Kishor, NitishKumar,  New Government, பீஹார், பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார், அரசியல் ஸ்திரத்தன்மை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்கிறார். இதன்மூலம் பீஹாரில் அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பும் என நம்புவதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள அவர், 'மகாகட்பந்தன்' கூட்டணியின் முதல்வராக ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியுள்ளார். முதல்வராக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்கிறார்.


latest tamil news


பீஹார் அரசியல் சூழல்கள் குறித்து தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீஹாரில் அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பும் என நம்புகிறேன். புதிய அத்தியாயத்தை துவங்க உள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீஹார் மக்களின் விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். 2013-14 முதல், பீஹாரில் 6வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சி நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசியல் ஸ்திரமற்ற சூழல் தொடர்கிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடனான இந்த கூட்டணி நீடிக்கும் எனவும், மக்களின் எண்ணங்களுடன் ஒத்து இருக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய அரசு முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேஜஸ்வி யாதவ் பீஹாரில் தனிப்பெரும் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த புதிய அரசாங்கத்தில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை மக்கள் பார்க்க உள்ளனர். தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்று எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கூட்டணி அமைந்ததாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202214:07:13 IST Report Abuse
கேசவன்    சென்னை எதிர் கட்சியின் ரகசியங்களை bjpக்கு போட்டு கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார்
Rate this:
Cancel
11-ஆக-202207:10:17 IST Report Abuse
கேசவன்    சென்னை இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. மம்தா இவரை திட்டி விரட்டி விட்டார். சோனியா ராகுல் இவரை துரத்திவிட்டனர். இவர் ஒரு spy
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
10-ஆக-202221:13:50 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy பீகாரில் புதிய கூட்டணிக்குப் பெயர் மஹாகட்பந்தன்? மஹாராஷ்ட்ராவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்குப் பெயர் மஹா விகாஸ் அகாடி. இதன் கதையைப் பார்த்தால் புதிய கூட்டணியின் பெயர் ராசி எப்படியிருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X