”சீனாவின் கடன் வலையில் சிக்கி விட வேண்டாம்” : எச்சரிக்கும் வங்கதேச அமைச்சர்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சீனா விரிக்கும் கடன் வலையில் சிக்கி, வளரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விட வேண்டாமென வங்கதேச நிதி அமைச்சர் முஸ்தபா கமல் எச்சரித்துள்ளார்.சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013ல் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். சீனாவின் பட்டு சாலை திட்டம் போன்றே கிழக்கு ஆசியா முதல் ஐரோப்பா வரை வர்த்தக இணைப்பை ஏற்படுத்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை
சீனா, China,Bangladesh Finance Minister,Chinese loans strapped, debt-trap, பொருளாதார நெருக்கடி, வங்கதேச அமைச்சர், எச்சரிக்கை


சீனா விரிக்கும் கடன் வலையில் சிக்கி, வளரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விட வேண்டாமென வங்கதேச நிதி அமைச்சர் முஸ்தபா கமல் எச்சரித்துள்ளார்.


சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013ல் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். சீனாவின் பட்டு சாலை திட்டம் போன்றே கிழக்கு ஆசியா முதல் ஐரோப்பா வரை வர்த்தக இணைப்பை ஏற்படுத்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறிவருகிறது. இத்திட்டத்தின் கீழ் இலங்கை, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சீனா கடன்களை அளித்துள்ளது. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பின்னணியில் பெல்ட் அண்டு ரோடு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.


latest tamil newsரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, இறக்குமதி காரணமாக வெளிநாட்டு கையிருப்பு குறைந்து பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் வங்கதேச பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. இதனை சமாளிக்க கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரி விண்ணப்பித்துள்ளது. சீனாவின் பெல்ட் அண்டு ரோடு திட்டத்தில் உறுப்பினராக உள்ள வங்கதேசம், சுமார் 4 பில்லியன் டாலர்கள் சீனாவிற்கு கடன்பட்டுள்ளது.

கடந்த வாரம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது உள்கட்டமைப்பில் ஒத்துழைப்பை தொடர இருப்பதாக இருநாடுகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஃபைனான்சியல் டைம்ஸ் இதழுக்கு வங்கதேச நிதியமைச்சர் முஸ்தபா கமல் சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

”சீன வங்கிகள் தனது கடன்களை மதிப்பிடுவதற்கு மிகவும் வலுவான செயல்முறையைப்
பின்பற்றுகிறது. இது போன்ற மோசமான கடன்கள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு, நெருக்கடியை ஏற்படுத்தும். ஒரு திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன் அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

முடிந்தவரை விரைவாக செலுத்தும் கடன்களை மட்டுமே நாங்கள் பெறுகிறோம். மற்ற திட்டங்களுக்கு என்று வரும் போது கடன் பெறுவதில்லை.latest tamil news


குறிப்பிடத்தக்க வகையில், சீன ஆதரவுடன் துவங்கப்பட்ட வெள்ளை யானை உள்கட்டமைப்புத் திட்டங்கள் வருவாயை பெருக்க தவறியதால், கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பெல்ட் அண்டு ரோடு திட்டத்தை பொறுத்தவரை, உலகம் முழுவதும் நிலைமை என்னவாக இருந்தாலும், இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள அனைவரும் ஒருமுறைக்கு, இருமுறை யோசிப்பார்கள். எல்லோரும் சீனாவை குற்றம்சாட்டுகிறார்கள். சீனா அதற்கு உடன்பட முடியாது. ஏனெனில் அவர்களிடம் பொறுப்பு உள்ளது.

இலங்கை நெருக்கடிக்குப் பிறகு, சீன அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட அம்சத்தை கவனிக்கவில்லை என்று உணர்ந்தோம். இது மிகவும் முக்கியமானது. வங்கதேசத்தில், அப்படி ஒரு சூழ்நிலையை நினைக்க கூட வழியில்லை”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டில் வங்கதேசத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஐ.எம்.எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜப்பானுக்கு 9 பில்லியன் டாலர் அல்லது 15 சதவீதம் கடன்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.

வங்கதேச அரசு ஜூன் மாதம் டாக்கா அருகே 3.6 பில்லியன் டாலர் மதிப்பில் பத்மா பாலத்தை திறந்து வைத்தது. இந்தத் திட்டம் சீனாவின் நிதியுதவியால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முன்வைக்கப்பட்டாலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மேலும், வங்கதேச அரசு, 5 ஜி சேவைக்கான உள்கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட மேம்பாட்டு திட்டங்களை ரத்து செய்ததன் மூலம் பொருளாதார சரிவை சமாளித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
11-ஆக-202206:38:11 IST Report Abuse
Dharmavaan உலக அளவில் கந்து வட்டிக்காரன் சீனாதான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஆக-202220:01:49 IST Report Abuse
Ramesh Sargam இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் நிலைமையை அறிந்து இந்த வங்கதேச அமைச்சர் இப்படி எச்சரிக்கிறார். நல்லவேளை வங்கதேசம் இந்த தந்திரகார சீனாவிடம் சிக்கவில்லை.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
10-ஆக-202215:48:17 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பண்ணி குட்டி போட்டா மாதிரி நாடு முழுக்க மக்கள் தொகை இருக்கும்போது அகோரம் தாண்டவமாடும்.. இது இயல்பு...
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-ஆக-202216:15:33 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி அப்படியே நாம வடநாட்டில் போட்டு தள்ளுவதையும் கொஞ்சம் கவனிக்கவேணுக் அவர்களுக்கு சேர்த்துதான் ஒன்றிய அரசு நம்மிடம் வரி வசூல் செயகிறது...
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
11-ஆக-202206:37:31 IST Report Abuse
Dharmavaanநாடு பூராவும் போட்டு தள்ளுபவன் ஜிகாதிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X