6 வாரத்தில் 4 கிலோ குறைத்த ஜெனிலியா!

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | |
Advertisement
'இடியட்' எனும் வார்த்தையையும் இனிமையாக்கியவர் நடிகை ஜெனிலியா. திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இணையவழியே எப்போதும் ரசிகர்களுடன் இணைந்திருப்பவர். அப்போது இருப்பது போலேவே இப்போதும் இருக்கும் ஜெனிலியா தனது பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஜெனிலியா 6 வாரத்தில் 4 கிலோ எடை குறைத்த பயணத்தை ஒரு
Lifestyle, Health, Fitness, Genelia, Gymworkouts, லைப்ஸ்டைல், ஹெல்த், பிட்னஸ், ஜெனிலியா

'இடியட்' எனும் வார்த்தையையும் இனிமையாக்கியவர் நடிகை ஜெனிலியா. திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இணையவழியே எப்போதும் ரசிகர்களுடன் இணைந்திருப்பவர். அப்போது இருப்பது போலேவே இப்போதும் இருக்கும் ஜெனிலியா தனது பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஜெனிலியா 6 வாரத்தில் 4 கிலோ எடை குறைத்த பயணத்தை ஒரு குட்டி டாக்குமெண்டரி போல் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோ வரை:


latest tamil newsபொதுவாக 60 கிலோ இருப்பவர்கள் தங்களது எடையில் ஒரு 5 கிலோ குறைக்க மிகவும் தங்களை வருத்தி கொள்ள வேண்டும். ஜெனிலியாவும் அப்படி 6 வாரத்தில் 4 கிலோவை குறைக்க படாதபாடுபட்டுள்ளார் என்பதை அந்த வீடியோ பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஜிம்மில் பல உபகரணங்களைப் பயன்படுத்தி கார்டியோ, வெயிட் லிப்டிங், கயிறு பயிற்சிகள் என ஜெனிலியா உடல் எடையை குறைக்க பல உடற்பயிற்சி மேற்கொண்டு கடுமையாக உழைத்துள்ளார்.

நாம் பார்க்கும் போது அந்த பயிற்சிகள் சிரமமாக தெரிந்தாலும் அவர் அதை ஒரு சிறந்த பயணம் என குறிப்பிடுகிறார். உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாவும் அவருக்கு அந்த பயணம் எளிதானதாக இருக்க வில்லையாம். அவர் கூறுகையில் "நான் சந்தேகங்களுடன், நிறைய அச்சத்துடன் இந்த எடை குறைப்பு பயணத்தை துவக்கினேன், ஆனால் 6 வாரங்கள் கழித்து இன்று இந்த இலக்கை அடைந்துள்ளேன். இதனால் எனக்கு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நிர்வகிக்கும் திறன் எல்லாம் இருப்பதாக உணர்கிறேன். உடற்தகுதி எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு திருட்டு டய்ட் இருப்பது கொஞ்சம் தடையாக இருக்கலாம்.' என குறிப்பிடுகிறார்.


latest tamil newsஉடற்தகுதியில் எடை குறைப்பு மட்டும் முக்கியம் அல்ல, நாம் செய்யும் உடற்பயிற்சி மூலம், தசை வளர்ச்சி ஆரோக்கியாமாக மாற வேண்டும் என தெளிவுபடுத்துகிறார். அதுதான் எப்போதும் பப்ளியாக இருக்கும் ஜெனிலியாவை சுறுசுறுப்பாக வைப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் இந்த ஆரோக்கியமான உடற்பயிற்சியை தொடரப் போவதாகவும் கூறிப்பிடுகிறார். அதற்காக #GoGeneGo என ஹேஷ்டாக்கும் போட்டுள்ளார்.

நாமும் ஜெனிலியா சொல்வதுபோல், நமது வாழ்வில் எடை குறைப்பதில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும். டயட்டில் இருந்தும் உடல் எடை குறையவில்லை என்றால், தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தினமும் சுமார் 30 நிமிடங்கள் கார்டியோ உடன் கூடிய உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவும். விரைவாக உடல் எடையை குறைக்க, முதலில் நீங்கள் செய்யவேண்டியது சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும், இன்சுலின் அளவைக் குறைத்து, விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X