தமிழகத்திற்கு ரூ.4758.78 கோடி நிதி விடுவிப்பு: மத்திய அரசு

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4,758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம்,
தமிழகத்திற்கு ரூ.4758.78 கோடி நிதி விடுவிப்பு: மத்திய அரசு

புதுடில்லி: மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4,758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வரி பகிர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்க கூடிய வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், அவர்களுக்கு என்னென்ன மாதிரியான விஷயங்களுக்காக செலவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கலந்தாலோசித்து, நிதி கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-ஆக-202217:55:38 IST Report Abuse
Rafi ஏற்கனவே விளையாட்டிற்காக குஜராத்திற்கு 600 கோடிக்கு மேல், உ பிக்கு 530 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு 33 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். பாதிக்கப்படும் மாநிலங்கள் இணைந்து செயல் பட வேண்டும்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
11-ஆக-202207:03:26 IST Report Abuse
vadiveluஉறுத்தாதீர்கள், மாநிலங்கள் சித்தத்தை கொடுத்து கேட்டதை கொடுக்கிறார்கள், மாநில கேட்காதது மாநிலத்தின் தவறு....
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
10-ஆக-202217:12:13 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ///உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு//.... செய்யுங்க... செய்யுங்க.... எத்தனை நாள் செய்வீங்க....? ஆட்சி, அதிகாரம் கையில் உள்ளதற்காக... ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக் கூடாது... பகல்...னு இருந்தா, இரவு...ன்னு ஒன்று கட்டாயம் உண்டு.... இது இயற்கை நியதி... அதை மறந்தால்......?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202215:41:42 IST Report Abuse
Sampath Kumar அது என்ன விடுவிப்பு? எங்க பணத்தை புடுங்கி அதை திருப்பி தார்வதற்ககு பஎர் விடுப்பா? என்னமோ பிணைய கைதிகளை விடுவிப்பது போல உள்ளது திருப்பி சேலுத்தியது என்று இருக்கவேண்டும்
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
10-ஆக-202216:08:32 IST Report Abuse
vadiveluஅன்னே இதே அளவு பணம் உங்களிடம் தமிழகத்தில் வசூல் ஆகும் ஜி எஸ் டீ தொகையில் வசூல் ஆகும் போதே வந்து விடுகிறது, இதன் கணக்கு வழக்குகளை சரி பார்த்த பின் (ஜி எஸ் டீ பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும்) மாநில மேம்பாட்டுக்கான தொகை கொடுக்க படுகிறது. விடுவிப்பு என்றால் அங்கே சேர்ந்த தொகை என்று பொருள். மாநிலத்தில் ஜி எஸ் டீ வரி கொடுப்பது நுகர்வோர், அதை சரியாக செலுத்த வேண்டியது வணிகர்களின் கடமை. வணிகர்கள் ஜி எஸ் டீ கொடுத்துதான் கொள்முதல் செய்கிறார்கள், அதை அவர்கள் கணக்கில் திரும்ப சேர்க்க வேண்டும், அதைத்தான் கணக்கு வழக்கு என்று சொல்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X