கவலையும் உணவும்!| Dinamalar

கவலையும் உணவும்!

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | |
கவலை இல்லாத மனிதர்கள் இல்லை. அதிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பது நம் மனவலிமையைப் பொருத்தது. சில சிக்கலான மனநலக் கோளாறுகளை கையாள சில அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. உணவுக்கும் அதில் முக்கிய பங்குண்டு. நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவை நீங்கள்
Lifestyle, Food, Health, Anxity, Relieffoods, லைப்ஸ்டைல், உணவு, ஹெல்த், உணவு, கவலை, பதட்டம்

கவலை இல்லாத மனிதர்கள் இல்லை. அதிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பது நம் மனவலிமையைப் பொருத்தது. சில சிக்கலான மனநலக் கோளாறுகளை கையாள சில அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. உணவுக்கும் அதில் முக்கிய பங்குண்டு.

நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவை நீங்கள் எடுத்து கொண்டால் மன ரீதியாக நீங்கள் நிறைய மாற்றத்தை உணர்வீர்கள் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 7.6 சதவீதம் பேர் பதற்றத்துடன் கூடிய கவலையில் தவிப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றன. பலர் இதற்காக சிகிச்சையும் எடுத்துகொள்கிறார்கள். எப்போதும் கவலையாக காணப்படுபவர்கள், அதை குறைக்க உடற்பயிற்சி, சுவாச பயிற்சி மேற்கொண்டாலும், நல்ல பலன் தரும்.


latest tamil newsஇது மட்டுமல்ல நீங்கள் உண்ணக்கூடிய சில உணவுகளில் உள்ள சில நல்ல சத்துகள், மூளையின் செயல்பாட்டிற்கு ஒரு அமைதியை தந்து, கவலை, பதட்டம் போன்ற உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க உதவும். அவை என்னென்ன என இப்போது பார்க்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் டிரிப்டோபனின் எனும் அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் செரோடோனின் ஆக மாற்றப்பட்டு, தளர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

முட்டை, இறைச்சி மற்றும் பால் பொருட்கள்:

புரதம் நிறைந்த முட்டை, இறைச்சி மற்றும் பால் பொருட்கள் டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. அதனால் பதட்ட உணர்வு வராமல் எப்போதும் திடமாக இருக்க செய்யும்.

சியா விதைகள்:

சியா விதைகள் மூளையை மேம்படுத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. அவை கவலையை போக்க உதவும்.


latest tamil newsசிட்ரஸ் பழங்கள்:

பொதுவாக சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பதட்டத்தை ஊக்கப்படுத்தும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

பாதாம் :

பாதாம் கணிசமான அளவு வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொடுக்கிறது. இவை மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எப்போதும் சமநிலையில் இருக்கவும் அது உதவும். அதனால் தினமும் உங்கள் தேவைக்கு ஏற்ப பாதாமை எடுத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் பதட்டம் உணர்வு அதிகம் ஏற்படாமல் தவிர்க்கும்.


latest tamil newsதேநீர்:

எவ்வளவு பெரிய டென்ஷனையும் சிங்கிள் டீ சரி செய்துவிடும் என்பார்கள். அதிலும் கிரீன் டீயில் எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பதட்டத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பிளாக் டீ மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் அமைதியான மனநிலையை உருவாக்கவும் உதவுகிறதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X