பங்கு சார்ந்த மியூட்சுவல் பண்டுகளுக்கு வரும் முதலீடு 42% சரிவு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலையில் பங்குசார்ந்த மியூட்சுவல் பண்டுகளுக்கு வந்த முதலீடு 42 சதவீதம் குறைந்து ரூ.8,898 கோடியாக குறைந்துள்ளது. இது ஜூன் மாதம் ரூ.15,497 கோடியாக இருந்தது. பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் நிலவுவதால் இச்சரிவு காணப்படுவதாக கூறுகின்றனர்.அதே சமயம் மியூட்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.35.64
Mutual_Fund, SIP, Sensex, Nifty, MF_Inflow

இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலையில் பங்குசார்ந்த மியூட்சுவல் பண்டுகளுக்கு வந்த முதலீடு 42 சதவீதம் குறைந்து ரூ.8,898 கோடியாக குறைந்துள்ளது. இது ஜூன் மாதம் ரூ.15,497 கோடியாக இருந்தது. பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் நிலவுவதால் இச்சரிவு காணப்படுவதாக கூறுகின்றனர்.

அதே சமயம் மியூட்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.35.64 லட்சம் கோடியிலிருந்து, ரூ.37.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. யூனிட்களின் மதிப்பு உயர்ந்ததால் இந்த ஏற்றம் காணப்படுகிறது. மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்களின் விருப்பமான முறைகளில் ஒன்று எஸ்.ஐ.பி., எனும் சிஸ்டமேட்டிக் முதலீட்டு முறை. ஜூலை மாதத்தில் எஸ்.ஐ.பி., மூலமான முதலீடு ரூ.12,139 கோடியாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.12,275 கோடியாக இருந்தது. அதே சமயம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், எஸ்ஐபி கணக்குகள் ஜூலையில் 5.51 கோடியிலிருந்து 5.61 கோடியாக உயர்ந்துள்ளது.


latest tamil news



பங்கு சார்ந்த பண்டுகளில், ஸ்மால் கேப் பண்டுகள் மற்றும் ப்ளெக்சி கேப் பண்டுகளில் முறையே ரூ.1,779 கோடி மற்றும் 1,381 கோடி முதலீடுகள் சேர்ந்தன. வட்டி விகித உயர்வினால் கடன் பண்டுகளுக்கு வரும் முதலீடு கடும் சரிவை சந்தித்தது. ஜூன் மாதத்தில் ரூ. 92,247 கோடி கடன் பண்டுகளுக்கு கிடைத்தது. ஜூலை மாதத்தில் அது வெறும் ரூ4,930 கோடியாக சுருங்கியது. கடன் பண்டுகள், லிக்விட் பண்டுகளிலிருந்து முறையே ரூ.7,692 கோடி மற்றும் ரூ.4,681 கோடி பணத்தை மக்கள் வெளியே எடுத்துள்ளனர். வங்கி மற்றும் பொதுத் துறை பண்டுகளிலிருந்து ரூ.2,809 கோடி பணத்தை எடுத்துள்ளனர். அதே சமயம் ஓவர்நைட் பண்டுகளில் ரூ.19,918 கோடி ரூபாயை பார்க் செய்துள்ளனர்.



latest tamil news


இது பற்றி மியூட்சுவல் பண்ட் நிபுணர்கள் கூறியதாவது: சந்தை கரெக்ஷனில் இருப்பதால் மியூட்சுவல் பண்டுகளுக்கு வரும் முதலீட்டின் வேகம் குறைந்து வருகிறது. ஜூலையில் இது செங்குத்தாக வீழ்ச்சி கண்டுள்ளது. முதலீட்டாளர்கள் பல லாபம் பார்த்துவிட்டு வெளியேறி இருக்கலாம். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் கடன் பண்டுகள் குறைவான லாபத்தையே வழங்கும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கடன் பண்டுகளில் இருந்து வெளியேறி இருக்கலாம். ஓவர்நைட் பண்டுகளில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளனர். இதன் மூலம் சரியான சமயத்தில் முதலீடுகளை மேற்கொள்ள காத்திருக்கிறார்கள் என தெரிகிறது. இவ்வாறு கூறினர். புதிய பண்ட் வெளியீடுகள் மூலம் ஜூலையில் ரூ. 1,446 கோடியை நிறுவனங்கள் திரட்டியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202217:36:38 IST Report Abuse
ஆரூர் ரங் போர் மற்றும் உலகளாவிய பணவீக்கத்தால் சந்தை இன்னும் கீழிறங்கி விடும் என எண்ணி பலர் முதலீட்டை குறைத்தனர். 😋 மனவுறுதியுடன் தொடர்ந்து முதலீடு செய்தவர்களுக்கு சென்ற வாரத்திலேயே லாபம் கிட்டத் துவங்கி விட்டது. பங்குச்சந்தை பயந்தாங்கொள்ளிகளுக்கானதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X