அதிமுக.,வில் பொது செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு அந்த பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.இந்த வழக்கு இன்று (ஆக., 10) விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு உறுப்பினர்
அதிமுக, பொதுசெயலாளர், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பழனிசாமி, பன்னீர்செல்வம்,பொதுக்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு அந்த பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு இன்று (ஆக., 10) விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், உரிய விதிகளை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டது. 1.5 கோடி தொண்டர்களின் விருப்பத்தை 2600 பேர் செல்லாததாக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்தார்.

இரு பதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டலாம் என விதி உள்ளது. தேர்தல் விதிதிருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும். மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில், கட்சி நிறுவனம் ஒன்றும் நிறுவனமோ, சொசைட்டியோ அல்ல. கட்சி விதிப்படி பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்டது. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டியது தவறில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறினால், இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொருளாளர் தலைமை கழக நிர்வாகிகள் கட்சியை நிர்வகிக்க வழி வகை செய்கின்றன என்றார்.
அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா? நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு, மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.


latest tamil newsஅதற்கு சசிகலா இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்ட விஜய் நாராயண் தொடர்ந்து கூறுகையில், சசிகலா சிறை சென்றதால் அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் தான் பொதுக்குழுவை கூட்டினார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்றார்.
அதற்கு நீதிபதி, பொதுக்குழு ஒப்புதல் பெறாததால் 2 பதவிகளும் காலாவதி என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தலும் செல்லாதா என கேள்வி எழுப்பினார்.மேலும், கட்சி விதிப்படி தமிழ் மகன் உசேன், அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டாரா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு தான் தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்றார்.

அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தமிழ்மகன் உசேன் முன்மொழியும் நேரத்தில் வெளிநடப்பு செய்ததாகவும், வழி மொழியவில்லை . இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறினார்.
பின்னர் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பொது செயலாளர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2 அல்லது 3 மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லும் எனக்கூறினார்.தொடர்ந்து வாதங்கள் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
12-ஆக-202218:36:38 IST Report Abuse
krish சொன்னாலும், சொல்லாவிட்டாலும், அம்மா என்றுமே (AIADMK General Secretary- Emeritus).அவர் வழி தனி வழி.
Rate this:
Cancel
Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்
11-ஆக-202201:02:22 IST Report Abuse
Mrs. Marie-Thérèse Evariste If you are a teacher in a school & if a group of teachers have hatred against their H.M., can the unpleasant group join together and choose a new HM. among themselves and chase out the exixting one ? OR will the education department or the higher authorities change / transfer the unwanted H.M. ? What is your answer ?
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
10-ஆக-202219:26:40 IST Report Abuse
Oru Indiyan எல்லா கட்சிகளிலும் நீங்கள் சொல்லும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X