நெசவுத்தொழில் நலிவுக்கு பா.ஜ., தான் காரணம்!

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பொள்ளாச்சி: 'நாட்டில் நெசவுத்தொழில் நலிவடைந்ததற்கு, பா.ஜ., அரசின் தவறான பொருளாதார, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்ளை தான் காரணம்,' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (10ம் தேதி), காங்., அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற காங்., மாநில தலைவர் அழகிரி செய்தியாளருக்கு அளித்த பேட்டி:இந்தியாவில் நெசவுத்தொழில் மிகவும் கடுமையான
நெசவுத்தொழில், பாஜ, அழகிரி , பாரதிய ஜனதா, காங்கிரஸ் , BJP, Alagiri, Bharatiya Janata, Congress,

பொள்ளாச்சி: 'நாட்டில் நெசவுத்தொழில் நலிவடைந்ததற்கு, பா.ஜ., அரசின் தவறான பொருளாதார, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்ளை தான் காரணம்,' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (10ம் தேதி), காங்., அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற காங்., மாநில தலைவர் அழகிரி செய்தியாளருக்கு அளித்த பேட்டி:

இந்தியாவில் நெசவுத்தொழில் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பஞ்சு பற்றாக்குறையால் நுால் விலை தீடீரென உயர்ந்தது. அதிக விலை கொடுத்து, நுால் உற்பத்தி செய்த பின், நுால் விலை சரிந்தது. இதனால், நெசவுத்தொழில் செய்வோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பஞ்சு மார்க்கெட் தற்போது, விவசாயிகள் கையில் இல்லை; கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் தான் உள்ளன. பத்து பெரிய முதலாளிகள் பஞ்சை வாங்கி பதுக்குகின்றனர்.
சமீபத்தில் அதிக லாபத்துக்காக அதிகப்படியான பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டில் பஞ்சுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், பஞ்சு இங்கு வந்து சேருவதற்குள் சீசன் முடிந்துவிட்டது. நாட்டில் நெசவுத்தொழில் நலிவடைந்ததற்கு, பா.ஜ., அரசின் தவறான பொருளாதார, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்ளை தான் காரணம். மத்திய அரசின் மின் சட்டத்திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளதால், அந்த மசோதாவை காங்., எதிர்க்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
11-ஆக-202207:01:35 IST Report Abuse
vadivelu பாவம், தங்கள் கட்சியில் உள்ள சில ஆயிரம் பேரை தக்க வைக்க எதையாவது உருட்டுகிறார்.
Rate this:
Cancel
10-ஆக-202220:21:42 IST Report Abuse
ராம் இந்தியாவில் எது நடந்தாலும் BJP காரணம்.
Rate this:
Cancel
10-ஆக-202219:23:50 IST Report Abuse
இ.வா ஆமாம் நீங்கள் சாப்பிடுவதற்கு கூட பா ஜி தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X