ஃபிஜி தீவுகளும் கடல் திராட்சையும்..!

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 10, 2022 | |
Advertisement
பருவநிலை மாற்றம் காரணமாக ஃபிஜி தீவுகளில் கடலில் விளையும், உணவுப்பொருள் கடற்பாசியான நாமா உற்பத்தி பரவலாக குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மக்கள் உணர துவங்கியுள்ளனர். தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபிஜி தீவு, 333 தீவுகளை கொண்டதாகும். இங்கு வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, நாமா எனப்படும் கடற்பாசியை நம்பியுள்ளனர். நாமா
பசுபிக், பெருங்கடல், நாமா, கடல் திராட்சை, ஃபிஜி தீவு, மீனவர்கள், வாழ்வாதாரம், Fiji islands, Pacific ocean, nama, Sea grapes


பருவநிலை மாற்றம் காரணமாக ஃபிஜி தீவுகளில் கடலில் விளையும், உணவுப்பொருள் கடற்பாசியான நாமா உற்பத்தி பரவலாக குறைந்து வருகிறது.உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மக்கள் உணர துவங்கியுள்ளனர். தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபிஜி தீவு, 333 தீவுகளை கொண்டதாகும். இங்கு வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, நாமா எனப்படும் கடற்பாசியை நம்பியுள்ளனர். நாமா கடற்பாசியை தற்போதெல்லாம் எவ்வளவு நீண்ட நேரம் செலவிட்டாலும், அதிகளவில் அறுவடைக்கு கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர்.


latest tamil newsசிறிய பச்சை திராட்சை போன்று காணப்படும் இந்த நாமா கடற்பாசி கடல் திராட்சை என்று அழைக்கப்படுகிறது. பசுபிக் தீவுகளில் வசிக்கும் மக்கள், தங்களது அன்றாட உணவில் இதனை பயன்படுத்துகின்றனர். இதனை ஊற வைத்து தேங்காய் பாலுடன் சேர்த்து அருந்துகின்றனர். சாலட் ஆகவும் உண்கின்றனர்.

சுமார் 10 கிலோ எடை கொண்ட நாமா கடற்பாசிக்கு, 10 டாலர் முதல் 20 டாலர் வரை வருமானம் ஈட்டிய நிலையில், நூற்றுக்கணக்கான மீனவ பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஃபிஜி தீவுகளை ஒட்டிய கடற்பகுதியில் மட்டுமே கிடைக்க கூடிய இந்த கடற்பாசியை அறுவடையின் போது, வேரோடு பிடுங்காமல் கடற்பாசியை மட்டுமே பறிப்பர். கடந்த சில வருடங்களாக நாமா மீண்டும் வளர நீண்ட காலம் எடுப்பதாக கூறுகின்றனர்.


latest tamil newsகடல் உயிரின ஆய்வாளர்கள் கூறுகையில்,

'நாமா சீராக வளராததற்கு கடலின் வெப்பநிலையே காரணம். இது மிகவும் உணர்ச்சிமிக்க தாவரம். இது உண்மையிலே கவலையளிக்க கூடிய ஒன்று. ஏனெனில் இது தான் அவர்களின் வாழ்வாதாரம். நாமா உற்பத்தி குறைந்து போவது, அவரகளது வாழ்க்கை முறை, பாரம்பரியம் கலாச்சாரம் அழிவதை குறிக்கிறது'

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1800ம் ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, 2021ம் ஆண்டு உலக பெருங்கடல்களில் வெப்பமான ஆண்டாக இருந்ததாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால், பசுபிக் கடலை சுற்றியுள்ள தீவுகள், உலகின் பிற பகுதிகளை விட அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X