நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டில்லி போலீசுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: சர்ச்சை கருத்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசாரிடம் மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு
 Noting Death Threat To Nupur Sharma, Supreme Court Offers Her Relief

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சர்ச்சை கருத்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசாரிடம் மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர்.


latest tamil news



இதனையடுத்து நுபுர் சர்மா மீது பா.ஜ., மேலிடம் கட்சி நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்தது. நுபுர் சர்மாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை டில்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுவை கடந்த ஜூலை 1-ம் தேதி நிராகரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்தியது.

இந்நிலையில் தனக்கு பல்வேறு தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால்,என் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து டில்லி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தார். இன்று நடந்த விசாரணையில், நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டில்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
11-ஆக-202216:23:23 IST Report Abuse
Rafi அரசு விடா முயற்சியுடன் கைது செய்யாமல் தேடி கொண்டே காப்பாற்றியது புலனாகின்றது. உலகத்திற்காக கட்சியிலிருந்து நீக்கியதாக நாடகம் ஆடியுள்ளதும் அம்பலம் ஆகியிருக்கு.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-ஆக-202221:03:15 IST Report Abuse
Vena Suna இந்து மதத்தை பற்றி ,ராமாயணத்தை பற்றி எப்போதும் மட்டம் தட்டி பேசினார் அண்ணா . அவரை என்னவென்று சொல்லுவது? அவரை அண்ணா என்று சொல்லுபவர்கள் அவரின் தம்பிகள் தான்...அப்படி தான் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-ஆக-202220:33:53 IST Report Abuse
Vena Suna இதை போல,இந்து கடவுள்களை மட்டம் தட்டும் திமுக மற்றும் திகவினர் மீது சட்டம் பாயுமா? இஸ்லாமியர் போல போராட்டம் செய்தால் தான் பாயுமோ? இது என்ன ரெட்டை வேடம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X