சீர்காழி அருகே நிவாரண முகாமில் நடைபெற்ற வளையணி விழா

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சீர்காழி : சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்ந்ததால் ஆறாவது நாளாக துண்டிக்கப்பட்ட கிராமங்கள். நிவாரண முகாமில் வளையணி விழா நடத்தி கிராம மக்கள் கொண்டாடினர் . கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழு கொள்ளளவு எட்டியதால் அணைக்கு வரும் நீர்
சீர்காழி அருகே  நிவாரண முகாமில் நடைபெற்ற வளையணி விழா

சீர்காழி : சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்ந்ததால் ஆறாவது நாளாக துண்டிக்கப்பட்ட கிராமங்கள். நிவாரண முகாமில் வளையணி விழா நடத்தி கிராம மக்கள் கொண்டாடினர் .

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழு கொள்ளளவு எட்டியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையார் அருகே கடலில் கலந்து வருகிறது.

இதனால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதலல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் கடந்த ஆறு நாட்களாக போக்குவரத்து துண்டிக்க பட்டு உள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகின் மூலமும் தண்ணீரை கடந்து வந்தும் அரசின் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நேற்று காலை தண்ணீரின் அளவு குறைந்ததால் நிவாரண முகாம்களில் இருந்து சிலர் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில் இன்று தண்ணீரின் அளவு மீண்டும் அதிகமானதால் வீடுகளுக்கு சென்ற மக்கள் மீண்டும் நிவாரண முகாம்களுக்கு திரும்பி வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மனைவி சிவரஞ்சனிக்கு இன்று வளையணி விழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் அரசின் நிவாரண முகாமிலேயே இந்த வளையணி விழா நடைபெற்றது.

தண்ணீர் சூழ்ந்து வீடுகளை இழந்து மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் இந்த சூழலிலும் சிவரஞ்சனியின் வளையணி விழாவை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நடத்தி கொண்டாடினர். இந்நிகழ்வு அங்கு இருப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202207:34:49 IST Report Abuse
duruvasar ஒரு சொட்டு நீரைகூட கடலில் கலக்க விடக்கூடாது என எதிர் கட்சியிலிருந்து போது கூறியதின் அடையாளமாக திராவிட மாடல் அரசு பிடிவாதமாக தண்ணீரை தேக்கி வைத்திருப்பதால் தான் இந்த சிறிய இடையூறு. பகுத்தறிவுள்ள மக்களுக்கு இது புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X