கேரளாவில் அரசு பணிக்கு தாயும், மகனும் தேர்ச்சி

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (2+ 16) | |
Advertisement
மலப்புரம்:கேரளாவில் தாயும், மகனும் மாநில அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரத்தை அடுத்த அரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பிந்து, 42. இவரது மகன் விவேக், 24. பிந்து கடந்த 10 ஆண்டுகளாக
கேரளாவில் அரசு பணிக்கு தாயும், மகனும் தேர்ச்சி

மலப்புரம்:கேரளாவில் தாயும், மகனும் மாநில அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரத்தை அடுத்த அரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பிந்து, 42. இவரது மகன் விவேக், 24. பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். விவேக் கல்லுாரி படிப்பை முடித்ததும், தாயும், மகனும் சேர்ந்து அரசு பணியாளர் தேர்வுகளை எழுத விரும்பினர்.
இதையடுத்து இருவரும் பயிற்சி மையத்தில் படித்து, தேர்வுகளை ஒன்றாக எழுதி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த அரசு பணியாளர் தேர்வில் இருவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பிந்துவின் மகன் விவேக் கூறியதாவது:நானும், அம்மாவும் பயிற்சி வகுப்புக்கு ஒன்றாக சென்றோம். என் தந்தை எங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தந்தார்.எங்களது ஆசிரியர்களும் ஊக்கம் அளித்தனர்; இருவரும் ஒன்றாக படித்தோம். ஆனால், ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என நினைக்கவில்லை. இதில் எங்களுக்கு மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
11-ஆக-202208:03:29 IST Report Abuse
Guruvayur Mukundan Thousands of people, who have been ed in the various PSC exams and put on the ranking list are still waiting in kerala for several years. Only the coaching centres are flourishing at all the places. Nothing else.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
11-ஆக-202207:10:54 IST Report Abuse
Mohan பையனுக்கு மட்டும் வேலை (இருந்தா) கொடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X