பழங்குடியின மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய தம்பதி

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வால்பாறை : பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, கோவை தம்பதி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.கோவையை சேர்ந்த குடல் சிகிச்சை டாக்டர் ராஜன், மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். டாக்டர் ராஜன் - வித்யா தம்பதி, இயற்கையை பாதுகாக்க தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கு
பழங்குடியின மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய தம்பதி

வால்பாறை : பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, கோவை தம்பதி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கோவையை சேர்ந்த குடல் சிகிச்சை டாக்டர் ராஜன், மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். டாக்டர் ராஜன் - வித்யா தம்பதி, இயற்கையை பாதுகாக்க தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய முடிவு செய்தனர். வால்பாறை, கல்லார்குடி தெப்பக்குளம் மேட்டில் வசிக்கும் பழங்குடியினருக்கு, ஆறு கழிப்பிடம் கட்டுவதற்கான தளவாட பொருட்களை டாக்டர் தம்பதியினர் வழங்கினர்.

மேலும் உடுமன்பாறை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 38 காடர் குடும்பத்திற்கு பழுதடைந்த குடிசையின் மேற்கூரை ஒழுகாமல் இருக்க தார்பாலினையும் வழங்கினர். டாக்டர் தம்பதியினருக்கு, கல்லார் குடி, உடுமன்பாறை பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202207:26:34 IST Report Abuse
duruvasar குடுகுடுவென இப்படி அவசரப்பட்டு செஞ்சிடீங்களே. சின்னவன் உதயநிதி கையால் கொடுக்க சொல்லியிருந்துதிருந்தால் சூப்பராக இருந்திருக்கும். சமூக நீதியை காபாற்றிருபார் .இது அனைவருக்குமான அரசு என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X