வருமான வரி ரீபண்ட் நிலையை அறிந்துகொள்வது எப்படி?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாத சம்பளதாரர்கள் தாங்கள் செலுத்திய வருமான வரியை பல்வேறு விதிகளின் கீழ் ஐ.டி., ரிட்டர்ன் பைல் செய்து எடுத்திருப்பீர்கள். பலருக்கு ரீபண்ட் வராமல் இருக்கும். வருமான வரியின் ரீபண்ட் நிலையை அறிய incometaxindiaefiling.gov.in மற்றும் என்.எஸ்.டி.எல்., இணையதளமான tin.tin.nsdl.com ஆகிய முகவரிகளில் சென்று தெரிந்துகொள்ளலாம். அவை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.பொதுவாக வருமான வரி தாக்கல் செய்த நாளில் இருந்து
ITR, Income_Tax, IT_Return, வருமான_வரி

மாத சம்பளதாரர்கள் தாங்கள் செலுத்திய வருமான வரியை பல்வேறு விதிகளின் கீழ் ஐ.டி., ரிட்டர்ன் பைல் செய்து எடுத்திருப்பீர்கள். பலருக்கு ரீபண்ட் வராமல் இருக்கும். வருமான வரியின் ரீபண்ட் நிலையை அறிய incometaxindiaefiling.gov.in மற்றும் என்.எஸ்.டி.எல்., இணையதளமான tin.tin.nsdl.com ஆகிய முகவரிகளில் சென்று தெரிந்துகொள்ளலாம். அவை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்த நாளில் இருந்து 20 முதல் 45 நாட்களில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அது பற்றிய நிலையை ஆன்லைன் மூலமாக லாக் இன் செய்து அறியலாம். அவை பல்வேறு வகையாக தரப்பட்டிருக்கும்.

செயலாக்கப்பட்டது: நீங்கள் அளித்த படிவம் ஏற்கப்பட்டு ரிட்டர்ன் செயலாக்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கும்.சமர்ப்பிக்கப்பட்டது & சரிபார்ப்பிற்காக நிலுவையில் உள்ளது: ஐ.டி.ஆர்., சமர்பிக்கப்பட்டாலும் அவை இ-சரிபார்ப்போ அல்லது கையொப்பமிடப்பட்ட ஐடிஆர் V படிவம் வருமான வரித்துறையால் பெறப்படவில்லை என்பதை இது குறிக்கும். வருமான வரி இணையதளம் சென்று ஆதார் உடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓடிபி பெற்று இதனை வெரிபை செய்துகொள்ளலாம்.

வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது: ரிட்டர்னுக்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு அவை முறையாக சரிபார்க்கப்பட்டது. ஆனால் ரிட்டர்ன் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதை இது குறிக்கும்.

குறைபாடு (Defective): தாக்கல் செய்யப்பட்ட ரிட்டனில் சில குறைபாடுகள் இருப்பதை வருமான வரித்துறை கவனித்துள்ள நிலை இது

காலாவதியானது (Expired): இந்த நிலை என்பது 90 நாட்களுக்குள் பணம் திரும்பப் பெறப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. வரி செலுத்தியோர் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான மறு கோரிக்கையை எழுப்பலாம்.

தற்போது இதனை வருமான வரி இணையதளத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது என பார்ப்போம்.

1.) incometaxindiaefiling.gov.in இணையதளம் சென்று பான் எண்ணை பயனர் ஐடியாக தந்து மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.


latest tamil news2.) 'ஐடி ரிட்டர்ன்ஸ்' என்ற பிரிவை தேர்ந்தெடுத்து 'வியூ பைல்டு ரிட்டர்ன்ஸ்' என்பதைக் கிளிக் செய்யவும்.


latest tamil news3.) இப்போது, ​​சமீபத்தில் தாக்கல் செய்த ஐடிஆரைச் சரிபார்க்கவும்

4.) அதில் வியூ டீடெய்ல்ஸ் என வலது ஓரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்தால் ஐடிஆரின் நிலையைப் பற்றி விரிவான தகவல் இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-202210:08:20 IST Report Abuse
Natarajan Ramanathan காங்கிரஸ் ஆட்சியில் எல்லாம் ரீஃபண்ட் என்பதே அனேகமாக வராது. இப்போது பத்து நாட்களுக்குள் வந்து விடுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X