மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி பகிர்வு நிதியை இரு தவணைகள் சேர்த்து, 4,758 கோடி ரூபாயை, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்கான திறனை மேம்படுத்த, மத்திய அரசு வரி பகிர்வு நிதியை வழங்கி வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் இந்த தொகையை இம்முறை, இரு தவணைகளாக சேர்த்து வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இரு தவணைகள் சேர்த்து, 1 லட்சத்து 16 ஆயிரத்து 665 கோடியே, 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வரிப் பகிர்வுக்கான பட்டியலில், மொத்தம் 28 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்துக்கு, 4,758 கோடி ரூபாய் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-நமது டில்லி நிருபர் -