தி.மு.க., தரும் ஆக்சிஜனில் உயிர் வாழும் கம்யூனிஸ்ட்கள்| Dinamalar

'தி.மு.க., தரும் ஆக்சிஜனில் உயிர் வாழும் கம்யூனிஸ்ட்கள்'

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (4) | |
சென்னை: ''கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலையில்லை; தி.மு.க., தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் சுமந்து உயிர் வாழ்ந்து வருகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை, நீலாங்கரை கடலில், தமிழக பா.ஜ., மீனவரணி சார்பில் தேசிய கொடி ஏந்திய படகு பேரணி, நடந்தது. அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மீனவரணி தலைவர் முனுசாமி உள்ளிட்டோர்
'தி.மு.க., தரும் ஆக்சிஜனில் உயிர் வாழும் கம்யூனிஸ்ட்கள்'

சென்னை: ''கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலையில்லை; தி.மு.க., தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் சுமந்து உயிர் வாழ்ந்து வருகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை, நீலாங்கரை கடலில், தமிழக பா.ஜ., மீனவரணி சார்பில் தேசிய கொடி ஏந்திய படகு பேரணி, நடந்தது. அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மீனவரணி தலைவர் முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின், அண்ணாமலை அளித்த பேட்டி:கவர்னர் ரவி, தமிழக மக்களின் அன்பை பெற்ற நடிகர் ரஜினியை அழைத்து பேசியிருக்கிறார். கவர்னரிடம் ரஜினி அரசியல் பேசியதில் என்ன தவறு? அவர்கள் இந்திய அரசியல், உலக அரசியல் தொடர்பாக பேசி இருப்பர்; அனைத்திலும் அரசியல் உள்ளது.ரஜினி பேசியது நாட்டு அரசியல். தி.மு.க.,வின், 'பீ டீம்' ஆகவும், தி.மு.க., கொடுக்கக் கூடிய ஆக்சிஜனில் உயிர் வாழக்கூடிய தலைவர்களும், தங்களின் இருப்பிடத்தை காட்ட, ரஜினியை விமர்சிக்கின்றனர்.


கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வேலையில்லை. தி.மு.க., தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் சுமந்து, உயிர் வாழ்ந்து வருகின்றனர்.அரசியலில் தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்.


கவர்னர் பலரை சந்திக்கும் நிலையில், ரஜினியை சந்தித்ததை மட்டும் ஏன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றனர்? தி.மு.க., கூட்டணி கட்சியினர், அரசியல் தெரிந்து தான் பேசுகின்றனரா, இல்லை கண்ணை மூடி பேசுகின்றனரா என தெரியவில்லை. அமைச்சர்கள் உளறி கொட்டி, முதல்வரை முட்டுச்சந்தில் நிற்க வைக்க போகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X