சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டில்லி குண்டுவெடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது: என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

Updated : செப் 08, 2011 | Added : செப் 08, 2011 | கருத்துகள் (24)
Share
Advertisement
டில்லி குண்டுவெடிப்பு, ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது, என்.ஐ.ஏ., தீவிர விசாரணை, 3 people arrested, Delhi bomb blast,

டில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதள மையத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து இமெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. டில்லியின் நேற்று காலை 10.17 மணியளவில் ஐகோர்ட் 5-வது வாசலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் 12 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய சூட்கேசில் வைக்கப்பட்ட குண்டு ஐகோர்ட் வாசலில் வெடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஹர்கத்-அல்-ஜிகாதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இதனை இமெயில் மூலம் அந்த அமைப்பு தெரிவிந்திருந்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர். அதன்படி இந்த இமெயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கீஸ்‌ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த இணையதள உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் ‌கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது ஐகோர்ட் வாசலில் நின்றிருந்த கார் ஒன்றினையும் ஆய்வு செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிதம்பரம் ஆலோசனை: இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், உள்துறை செயலர் ஆர்.கே. சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தற்போது ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசியபுலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நிலவரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது

ரூ. 5 லட்சம் பரிசு: இந்த குண்டு வெடிப்பு சம்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறுகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியன் முஜாகிதீன் :இதற்கிடையே டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏற்கனேவ ஹர்கத்-அல்- ஜிகாதி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக , இமெயில் வாயிலாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமெயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pusparaj - tirupur,இந்தியா
09-செப்-201111:04:33 IST Report Abuse
pusparaj குண்டு வெடிப்புக்கு காரணமான முஸ்லீம் தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும்...இவர்களால் உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel
krishna - delhi,இந்தியா
09-செப்-201106:35:36 IST Report Abuse
krishna குற்றவாளியின் புகைப்படங்கள் தாடியுடன் வெளியிடப்பட்டுள்ளது..இதை காணும் குற்றவாளிகள் வுடனே தங்கள் தாடியை ஷேவிங் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண முடியுமா?ஆகவே தாடி இல்லாத போடோவையும் வெளியிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-செப்-201105:21:28 IST Report Abuse
villupuram jeevithan இவர்களை பிடித்து என்ன செய்ய போகிறீர்கள்? மரண தண்டனையா கொடுக்க போகிறீர்கள்? இவர்களை சிறையிலிருந்து விடுவிக்க இன்னொரு குண்டு வெடிக்கும். மீண்டும் பிரதமர் இது கோழை செயல் என்பார். எல்லாம் தொடர் கதை. அன்ன ஹஜாரே சொல்லுவது போல் இவர்கள் அரசுக்கு எதிராக செயல்படவேண்டுமே ஒழிய அப்பாவி பொதுமக்களை தாக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X