பீமா கோரேகாவ்ன் கலவர வழக்கு: கவிஞர் வரவர ராவுக்கு 'ஜாமின்'

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: பீமா கோரேகாவ்ன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு, உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' அளித்தது.மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள பீமா கோரேகாவ்ன் என்ற இடத்தில், 2017 டிச., 31ல் எல்கர் பரிஷத் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், 82, பங்கேற்று பேசினார். இந்த மாநாடு
பீமா கோரேகாவ்ன் கலவர வழக்கு  கவிஞர் வரவர ராவுக்கு 'ஜாமின்'

புதுடில்லி: பீமா கோரேகாவ்ன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு, உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' அளித்தது.
மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள பீமா கோரேகாவ்ன் என்ற இடத்தில், 2017 டிச., 31ல் எல்கர் பரிஷத் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், 82, பங்கேற்று பேசினார். இந்த மாநாடு நடந்த மறுநாள் அப்பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது.
மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளால் துாண்டப்பட்டு இந்த கலவரம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.


latest tamil news




மாவோயிஸ்ட் உடன் தொடர்புடையவர்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், கவிஞர் வரவர ராவ் 2018 ஆக., 28ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவ் பல முறை ஜாமினில் வெளியே வர முயன்றார். ஆனால் கிடைக்கவில்லை. உடல்நிலையை காரணம்காட்டி, நிரந்தர ஜாமின் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்., மாதம் மனு செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரவர ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-202207:00:47 IST Report Abuse
Kasimani Baskaran கர்ஜிக்கும் நான்முக சிங்கம் நமக்கு வேண்டாம் சர்க்கஸ் சிங்கம்தான் வேண்டும் என்று அடம் பிடித்த கோஷ்டி இப்பொழுது ஹெரால்டு வழக்கில் பிசியாக இருப்பதால் அமைதி...
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
11-ஆக-202207:00:31 IST Report Abuse
Dharmavaan இது போன்ற தேசத்துரோக தேசவிரோத சக்திகளிடம் நீதி பரிவு காட்டுவதே பல குற்றங்கள் அதிகரிக்க காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X