எக்ஸ்குளுசிவ் செய்தி

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஜனாதிபதி திரவுபதி முர்மு, தன் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளித்துள்ளார்.ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிமுக்கியப் பதவி வகிப்பவர்களின் புகைப்படங்கள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள், துணை தூதரங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்படுவது மரபு.இதற்காக, பிரத்யேகமாக 'போட்டோ ஷூட்' நடத்தப்படும். பல்வேறு கோணங்களில்
ஜனாதிபதி திரவுபதி முர்மு  அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, தன் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளித்துள்ளார்.ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிமுக்கியப் பதவி வகிப்பவர்களின் புகைப்படங்கள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள், துணை தூதரங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்படுவது மரபு.இதற்காக, பிரத்யேகமாக 'போட்டோ ஷூட்' நடத்தப்படும். பல்வேறு கோணங்களில் வெவ்வேறு உடைகளில் பல புகைப்படங்கள் எடுக்கப்படும். அவற்றில் ஒன்றை அந்த தலைவர்கள் தேர்ந்தெடுப்பர்.



அந்த வகையில், திரவுபதி முர்முவுக்கான போட்டோ ஷூட், ஜனாதிபதி மாளிகையில் மூன்று பிரபல புகைப்படக் கலைஞர்களை வைத்து நடத்தப்பட்டது. அவர்கள் எடுத்த சிறந்த 32 புகைப்படங்கள் திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டன.அவற்றிலிருந்து, ஓர் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை திரவுபதி முர்மு தேர்ந்தெடுத்தார்.

அதில், ஜனாதிபதி முர்மு வெள்ளை நிறத்துடன் கூடிய பரிஹிதா ரக நீண்ட ரவிக்கை, சிவப்பு பார்டருடன் கூடிய வெண்ணிற சம்பல்புரி புடவை அணிந்து, எளிமையின் வடிவாக காட்சியளிக்கிறார்.இனி இந்தப் புகைப்படமே வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியலமைப்பு அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உள்ளிட்ட முக்கியஇடங்களில் இடம்பெறும். - நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (3)

Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஆக-202210:56:33 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள். எளிமையின் சின்னம், இவர் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை உயர்த்த பாடுபடவேண்டும், தான் பெற்ற இன்பம் அவர்களும் பெறுவதற்கு பாடுபடவேண்டும், நேர்மையாக வாழ்ந்து, குடும்ப தலைவியாக வளர்ந்து, கடும் இன்னல்களுக்கு நடுவில் பல லட்சம் கோடி மக்களில் ஒரு வால்நட்சரத்திரம் போன்று பிரகாசிக்கும் இவர் நேர்மைக்கும், எளிமைக்கும், ஒரு எடுத்துக்கட்டாக விளங்குவது நாட்டுக்கு பெருமை, வாழ்க வளமுடன். வந்தே மாதரம்
Rate this:
Cancel
VENKATESAN V - VANIYAMBADI,இந்தியா
11-ஆக-202210:16:04 IST Report Abuse
VENKATESAN  V அனைவரும் பெருமை கொள்வோம். கற்று கொள்வோம் .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-202210:01:16 IST Report Abuse
Natarajan Ramanathan நல்லது. சன்டிவி மாதிரியான RSB ஊடகங்கள் வேண்டும் என்றே அவரது வேறுமாதிரியான புகைப்படத்தை உபயோகித்து வந்தன.. இனி திருந்தட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X