வேகமாக தயாராகிறது புதிய பார்லிமென்ட்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் வேகமாக தயாராகி வருகிறது. இங்கு பயன்படுத்துவதற்கான தரைவிரிப்புகள், தேக்கு மரத்திலான மேஜைகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன.புதிய பார்லிமென்ட் வளாகம் அடங்கிய, 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, புதிய பார்லிமென்ட் கட்டடம் முக்கோண வடிவில் அமைய உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர
வேகமாக தயாரார் , புதிய பார்லிமென்ட்


புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் வேகமாக தயாராகி வருகிறது. இங்கு பயன்படுத்துவதற்கான தரைவிரிப்புகள், தேக்கு மரத்திலான மேஜைகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன.புதிய பார்லிமென்ட் வளாகம் அடங்கிய, 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, புதிய பார்லிமென்ட் கட்டடம் முக்கோண வடிவில் அமைய உள்ளது.


latest tamil news



இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். வரும், நவ., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

பார்லி., கட்டடத்துக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தரை அமைக்கும் பணியும், உள்ளலங்காரப் பணிகளும் மிக விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த வளாகத்தில் பயன்படுத்துவதற்காக, உத்தர பிரதேசத்தின் மிர்சாபுரில் இருந்து அலங்கார தரைவிரிப்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் டேபிள், நாற்காலி உள்ளிட்ட தேக்கு மரத்திலான மரச்சாமான்கள், மஹாராஷ்டிராவில் இருந்து வரத் துவங்கியுள்ளன.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202209:49:45 IST Report Abuse
duruvasar புதிய கட்டிடத்தை எதிர்த்த தன்மான சிங்கங்கள் என்ன செய்யுமோ ?
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
11-ஆக-202207:43:35 IST Report Abuse
பிரபு "ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து பளிங்கு கற்கள், உத்தர பிரதேசத்தின் மிர்சாபுரில் இருந்து அலங்கார தரைவிரிப்புகள், மஹாராஷ்டிராவில் இருந்து டேபிள், நாற்காலி உள்ளிட்ட தேக்கு மரத்திலான மரச்சாமான்கள்" - ஏம்ப்பா எங்க தமிழகத்திலிருந்து எதுவுமே இல்லையா?
Rate this:
11-ஆக-202219:42:49 IST Report Abuse
N Sasikumar Yadhav திரு பிரபு அவர்களே தமிழகத்திலிருந்து விஞ்ஞானரீதியான ஊழல்செய்பவர்களை பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்பாமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு...
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
11-ஆக-202206:48:08 IST Report Abuse
vadivelu முதலில் வாடகை கொடுத்து கொண்டு இருக்கும் அரசு அலுவலகங்களை இங்கே மாற்ற வேடனும்.பல கோடி ரூபாய் மிச்ச படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X