ஒற்றை இலக்க மாணவர்களுடன் 44 பள்ளிகள்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
கரூர்:கரூர் மாவட்டத்தில், 44 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலும், ஒரு மாணவர் கூட இல்லாத ஒரு பள்ளியும் உள்ளன.கரூர் மாவட்டத்தில், 8 ஒன்றியங்களில், 820 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 42 ஆயிரத்து, 409க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால் பல பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர்.இதுகுறித்து, கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரூர்
ஒற்றை இலக்க மாணவர்களுடன் 44 பள்ளிகள்

கரூர்:கரூர் மாவட்டத்தில், 44 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலும், ஒரு மாணவர் கூட இல்லாத ஒரு பள்ளியும் உள்ளன.

கரூர் மாவட்டத்தில், 8 ஒன்றியங்களில், 820 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 42 ஆயிரத்து, 409க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால் பல பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர்.


இதுகுறித்து, கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களில், 10க்கும் குறைவான மாணவர்களுடன், 44 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 14 பள்ளிகளில், 5க்கும் குறைவாகவே மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. க.பரமத்தி ஒன்றியம், குஞ்சாம்பட்டி பள்ளியில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை.


ஆனால், மாணவர்கள் அதிகம் படிக்கும் துவக்கப்பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு ஆசிரியர்களை வைத்து, 1 முதல், 5ம் வகுப்பு வரை எப்படி பாடம் நடத்துவார்கள் என நினைக்கும் பெற்றோர், ஆங்கில பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.


இதேநிலை நீடித்தால், இன்னும், 5 ஆண்டுகளில் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜீவா கூறுகையில், ''ஒற்றை இலக்க மாணவர்களுடன் செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளியை பூட்டிய புகார் குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X