21ல் காங்., தலைவர் தேர்தல்: ராகுல் தொடர்ந்து மவுனம்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி :காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதில் போட்டியிடுவது குறித்து முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை, தன் தாய் சோனியாவிடம் இருந்து, 2017ல் ராகுல் ஏற்றார். 2019 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 52ல் மட்டுமே காங்., வென்றது.இதையடுத்து
21ல் காங்., தலைவர் தேர்தல்  ராகுல் தொடர்ந்து மவுனம்

புதுடில்லி :காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதில் போட்டியிடுவது குறித்து முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து
மவுனம் காத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை, தன் தாய் சோனியாவிடம் இருந்து, 2017ல் ராகுல் ஏற்றார். 2019 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 52ல் மட்டுமே காங்., வென்றது.இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார்.




latest tamil news


'ராகுல் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்' என, மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் சிலர் கருத்து கூறி
வருகின்றனர்.'கோஷ்டி மோதல் அதிகமாக உள்ளதால், கட்சியை ஒருங்கிணைத்து செயல்பட, சோனியா குடும்பத்தைச் சேர்ந்தவரே தலைவராக இருக்க
வேண்டும்' என சோனியா, ராகுல் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 21ல் துவங்குகிறது.
ஆனால், கட்சி தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து ராகுல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதனால் மூத்த தலைவர்கள் கவலையில் உள்ளனர்.


பிரியங்காவுக்கு மீண்டும் கொரோனா



காங்., பொதுச் செயலர் பிரியங்காவுக்கு, கடந்தாண்டு ஜூனில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதை
யடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்தியுள்ளார்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த நிர்வாகிகள் பவன் கெரா, அபிஷேக் மனு சிங்வி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கட்சியின் முன்னாள் தலைவரும், பிரியங்காவின் சகோதரருமான ராகுல், ராஜஸ்தானில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
பிரியங்கா, ராகுலின் தாயும், கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியாவுக்கு, கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202215:04:09 IST Report Abuse
வேல் இக்கட்சிக்கும் நம் தமிழக முதல்வரே தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202209:44:51 IST Report Abuse
duruvasar ராகுல் காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்க பட்டால் அன்னிபெசன்ட், சோனியா வரிசையில் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு வெளிநாட்டு பிரஜை கட்சியின் தலைவராக இருப்பார்.
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
11-ஆக-202209:29:46 IST Report Abuse
Bala Murugan காங்கிரஸில் நல்ல அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினரை தலைவராக்குவது கட்சியினருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது. இல்லையென்றால் தோல்விதான் நிலையாகும். தோல்வியே வந்தால் கட்சி இருந்த இடம் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கு. அவர்கள் இத்தாலிக்கு சர்ரென்று பறந்து விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X