மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி, :'ரயில் பயணங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்' என பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது.ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட
மூத்தோருக்கு ரயிலில் சலுகை  பார்லிமென்ட் குழு பரிந்துரை

புதுடில்லி, :'ரயில் பயணங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்
படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்' என பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது.ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட ஊக்குவிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதில், வசதியான மூத்த குடிமக்கள் தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுத்ததால் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைத்தது.


latest tamil news



இந்நிலையில், பார்லி., - எம்.பி.,க்கள் குழு, 4ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு, கட்டணத்தில் 40 முதல் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நெருக்கடியின் போது அது நிறுத்தப்பட்டது.


தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் 'ஸ்லீப்பர்' மற்றும் 'ஏசி' வகுப்புகளில் பயணிப்போருக்கு சலுகை வழங்க பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மூத்த குடிமக்களுக்கு தரப்படும் சலுகைகளுக்காக, ரயில்வேக்கு ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் செலவாவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-202209:58:40 IST Report Abuse
Natarajan Ramanathan அறுபது அல்லது 65 வயதுக்கு மேல் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்கவேண்டும்...
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
11-ஆக-202209:50:02 IST Report Abuse
R Hariharan நன்றி. மீண்டும் அமல் படுத்த பட்டாள் நடுத்தர மக்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் ரயில்வே வாரியம் மூதோர்க்கு மதிப்பு குடுத்த மாதிரியின் இருக்கும். நன்றி கூடிய சீகிரம் அமல்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஆக-202209:47:18 IST Report Abuse
Lion Drsekar நல்ல திட்டம் ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்திருக்கார்கள் வாரத்துக்கு மூன்றுமுதல் நான்குமுறை தொலைதூர பயணத்தை மாமூலாக வைத்துள்ளார்கள். நண்பர்களுடன் பேசும்போது நமக்குதான் குறைந்த டிக்கட் ஆகவே எத்தினை முறைவேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று கூறி மகிழ்ச்சி உலா வருகின்றனர். ஆகவே இன்றைய மூத்த குடிமக்கள் இளைஞர்களை விட இளமையாக இருப்பதால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை என்று ஏதாவது முறையை கையாண்டால் நல்லது. சென்னை பேருந்து துறை மூத்த குடிமகன்களுக்கு டிக்கட்டுகளை முன்பே வழங்குகிறார்கள் அதுபோல், இரயில்வே துறையில் இருப்பவர்களுக்கு வழங்கும் பாஸ் போல் ஆறு மாதம், மூன்று மாதம் என்று முன்கூட்டியே வழங்கினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், இல்லை என்றால் எந்த நோக்கத்துக்காக இந்த சலுகை வழங்கப்படுகிறதோ அந்த நோக்கமே சீரழிந்து போகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X