விமான போக்குவரத்து துறை முடிவால் கட்டணம் உயருமா?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கி உள்ளதால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், விமான நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில், அந்த வரம்புகளை நீக்கி, விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க,
விமான போக்குவரத்து துறைல , கட்டணம் உயருமா?

புதுடில்லி : மத்திய அரசு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கி உள்ளதால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், விமான நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில், அந்த வரம்புகளை நீக்கி, விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் 72.5 சதவீத பயணிகள் எண்ணிக்கையை 85 சதவீதமாக உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது.


latest tamil news



இதையடுத்து, வரும் 31 முதல் பயணியரிடம் என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் சுதந்திரமாக தீர்மானிக்கும். ஆனாலும், இது பயணியரை பெரிய அளவில் பாதிக்காது என விமானத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தன்னுடைய சமூக வலைதளத்தில், 'தினசரி தேவை மற்றும் விமான எரிபொருளின் விலைகளை கவனமாக ஆய்வு செய்த பிறகே விமான கட்டண உச்சவரம்பை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவும்' என, பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
11-ஆக-202217:21:24 IST Report Abuse
T.SRINIVASAN முன்பெல்லாம் விமான கட்டணம் ஓரளவுக்கு குறைவாக இருந்தது. இப்போது இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. ஆகையால் சாதாரண மக்கள் மீண்டும் ரயில் பயணத்திற்கு மாறிவிட்டனர்
Rate this:
Cancel
11-ஆக-202212:16:29 IST Report Abuse
ஆரூர் ரங் போட்டி அதிகம் ஆவதால் விலை குறையவே வாய்ப்பதிகம். உலகம் முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள்😏 எண்ணிக்கை குறையும். விமான எரிபொருள் விலை மட்டுமே ஏற்ற இயக்கத்துக்குக் காரணமாக இருக்கும்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
11-ஆக-202210:24:49 IST Report Abuse
பாமரன் இதில் மாநில அரசுகளின் பங்குன்னு எதுவும் இல்லாததாலும்... முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு மற்றும் மக்களுக்கு எந்த வித நன்மையும் உண்டாக வாய்ப்பில்லைங்கறதாலும்... காரணமாக சம்பந்தப்பட்ட துறையின் முடிவு அப்பிடின்னு சிம்பிளா நியூஸ் போட்டாச்சு... அவ்ளோதான்... போங்க போங்க...🤭🤭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X