தொழில்துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: சிக்ரி இயக்குனர் பேட்டி| Dinamalar

தொழில்துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: சிக்ரி இயக்குனர் பேட்டி

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
காரைக்குடி : இந்தியாவில் அறிவியல் துறையும் தொழில் துறையும் ஏறுமுகத்தில் தான் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இருவருக்குமான கூட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்,' என டில்லி சி.எஸ்.ஐ.ஆர், நிறுவன பொது இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குனராக பதவி வகித்தவர் நா. கலைச்செல்வி. இவர் தற்போது டில்லி
தொழில்துறை, கட்டமைப்பு, சிக்ரி இயக்குனர், கலைச்செல்வி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


காரைக்குடி : இந்தியாவில் அறிவியல் துறையும் தொழில் துறையும் ஏறுமுகத்தில் தான் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இருவருக்குமான கூட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்,' என டில்லி சி.எஸ்.ஐ.ஆர், நிறுவன பொது இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.



காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குனராக பதவி வகித்தவர் நா. கலைச்செல்வி. இவர் தற்போது டில்லி சி.எஸ்.ஐ.ஆர், நிறுவன பொது இயக்குனராகவும், செயலராகவும் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆக., 8ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். காரைக்குடி வந்த அவர் கூறியதாவது:


latest tamil news



தமிழோ, ஆங்கிலமோ எந்த வழியில் கற்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி கற்கிறோம் என்பதே முக்கியம். எனது தாய் மொழியை நான் முழுமையாக படித்ததால் தான் அனைத்து மொழியையும் என்னால் கற்க முடிந்தது. இந்தியாவில் அறிவியல் துறையும் தொழில் துறையும் எப்போதும் ஏறுமுகத்தில் தான் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இருவருக்குமான கூட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான், அறிவியல் மற்றும் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும். விஞ்ஞானத்தில் பெண்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். அறிவியலுக்கு ஆண்- பெண் என்று வேறுபாடு இல்லை.



சாதிக்க தேவை முயற்சி மட்டுமே. சி.எஸ்.ஐ.ஆர், என்பது முக்கிய நிறுவனமாகவும் மாதிரி நிறுவனமாகவும் இருந்து, உலகில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பங்களிப்பு வழங்கி நம் கட்டுப்பாட்டின் அவற்றை வைத்திருப்பதே எதிர்கால திட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X