மின் கட்டணம் உயர்வு: ஆணையம் இன்று முடிவு? | Dinamalar

மின் கட்டணம் உயர்வு: ஆணையம் இன்று முடிவு?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (10) | |
சென்னை : மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, மின்சாரஒழுங்குமுறை ஆணையம்,சென்னையில் இன்று, மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துகிறது.தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஆலோசனைவழங்க, மாநில ஆலோசனைகுழு
மின் கட்டணம் உயர்வு, மின்சார ஆணையம், தமிழகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, மின்சாரஒழுங்குமுறை ஆணையம்,சென்னையில் இன்று, மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துகிறது.



தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஆலோசனைவழங்க, மாநில ஆலோசனைகுழு உள்ளது.


latest tamil news



அக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களாக, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள், கூட்டுறவு துறை செயலர்; உறுப்பினர்களாக எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர், பல துறைகளின்பிரநிதிகளின் என, 13 பேர் உள்ளனர்.கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தித் தர கோரிய மனுக்களை, மின் வாரியம் ஜூலை 18ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.



இது தொடர்பாக ஆணையம், மாநில ஆலோசனை குழுவில் விவாதிப்பதுடன், பொது மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த உள்ளது.அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை, மாநில ஆலோசனை குழு கூட்டம் நடக்கிறது.



அதில் பங்கேற்க, உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் நேற்றும், தொலைபேசி வாயிலாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் மின் வாரியம் தாக்கல்செய்துள்ள மனுக்கள் தொடர்பாகவும், மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்தும் ஆணையம், குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்க உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X