ரேஷன் கடைகளில் தரமான அரிசி; அமைச்சர் பெரியசாமி தகவல்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
அவனியாபுரம் : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.ரேஷன் கடைகளில் அனைத்து
ரேஷன் கடை, தரமான அரிசி,  அமைச்சர் பெரியசாமி,


அவனியாபுரம் : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.


latest tamil news




ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வரவுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டு இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
11-ஆக-202213:14:34 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman ஆமாம். மது, போதை பொருளில் வராதாதால், அரசு மது கடைகளை அதிகரிக்க உற்சாக படுத்துகிறது.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
11-ஆக-202212:22:58 IST Report Abuse
ram உங்கள் கொத்தடிமைகள் ஆர் எஸ் பி மீடியா இருக்கும் வரை தைரியமாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
Rate this:
Cancel
11-ஆக-202211:07:00 IST Report Abuse
SUBBU,MADURAI பெரியசாமி அண்ணாச்சி தரமான அரிசி தருவதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ரெடியா இருங்க சீக்கிரம் டெல்லியில் जेल போறதுக்கு. வரிசைப்படி ED யோட அடுத்த அலேக் நீங்கதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X