ரேஷன் கடைகளில் தரமான அரிசி; அமைச்சர் பெரியசாமி தகவல்| Dinamalar

ரேஷன் கடைகளில் தரமான அரிசி; அமைச்சர் பெரியசாமி தகவல்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (13) | |
அவனியாபுரம் : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.ரேஷன் கடைகளில் அனைத்து
ரேஷன் கடை, தரமான அரிசி,  அமைச்சர் பெரியசாமி,


அவனியாபுரம் : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.



latest tamil news



ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வரவுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.



கடந்த 10 ஆண்டு இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X