80 ஆண்டுக்கு பிறகு மின்சாரம்; திரிபுரா மலை கிராமங்கள் மகிழ்ச்சி

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சர்க்கிபரா :திரிபுராவில் உள்ள மலை கிராமங்களில், 80 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இங்குள்ள பல மலை கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் சிரமப்பட்டு வந்தன.இந்நிலையில், இந்த கிராமங்களுக்கு 'சோலார்' எனப்படும் சூரியமின்சக்தி வாயிலாக மின்சார வசதி செய்வதற்கான திட்டம், கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது.
80 ஆண்டு, மின்சாரம், திரிபுரா, மலை கிராமங்கள், மகிழ்ச்சி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சர்க்கிபரா :திரிபுராவில் உள்ள மலை கிராமங்களில், 80 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இங்குள்ள பல மலை கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் சிரமப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த கிராமங்களுக்கு 'சோலார்' எனப்படும் சூரியமின்சக்தி வாயிலாக மின்சார வசதி செய்வதற்கான திட்டம், கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 30ல் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.


latest tamil newsஇதன்படி, கோவாய் மாவட்டத்தில் உள்ள சர்க்கிபரா உட்பட, 12 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால், இந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுவரை மண்ணெண்ணெய் விளக்கு அல்லது 'பேட்டரி' வாயிலாக இயங்கும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். வீடுகளுக்கு மட்டுமல்லாமல், கிராம சந்தை, தெருவிளக்கு போன்றவற்றுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது.

இதனால், இந்த கிராம மக்கள் அதிக நேரம் உழைப்பதுடன், அதிக வருவாயை ஈட்டி வருகின்றனர். மாணவர்களும் இரவில் படிக்க முடிகிறது.இதுவரை, 12 வட்டாரங்களில், 2,930 தெரு விளக்குகள், 239 கிராம சந்தைகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayanthi Srinivasan - chennai,இந்தியா
11-ஆக-202213:17:32 IST Report Abuse
Jayanthi Srinivasan பத்து நிமிடம் கரண்ட் போனாலே நமக்கு தாங்க முடியவில்லை. இவர்கள் இத்தனை ஆண்டுகள் பொறுமையாக இருந்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
11-ஆக-202212:03:50 IST Report Abuse
raja அப்போ கடந்த எழுபது வருசமா காங்கிரசு ஒண்ணுமே கிழிக்கவில்லை போல இந்த மக்களுக்கு... இதுல இந்திய மக்களை பத்தி பேசுறார் இத்தாலி பப்பு...
Rate this:
Cancel
salama - Dammam ,சவுதி அரேபியா
11-ஆக-202209:55:27 IST Report Abuse
salama 80 yrs for power supply Some thing politics matters here ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X