சுங்க வசூலில் ரூ.6,000 கோடி மோசடி; சி.பி.ஐ., விசாரிக்க ஆம் ஆத்மி கோரிக்கை

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி : ''எம்.சி.டி., எனப்படும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் நடந்த சுங்க கட்டண ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரி உள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் எம்.சி.டி., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான துர்கேஷ் பதக், 'எம்.சி.டி., சுங்க கட்டண வசூலில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது; இதில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பு
சுங்க  கட்டண ஊழல் , சுங்க கட்டண மோசடி, சிபிஐ, ஆம் ஆத்மி , மணீஷ் சிசோடியா, AAP, Manish Sisodia,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : ''எம்.சி.டி., எனப்படும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் நடந்த சுங்க கட்டண ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரி உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.சி.டி., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான துர்கேஷ் பதக், 'எம்.சி.டி., சுங்க கட்டண வசூலில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது; இதில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது' என குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பாக புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று கூறியதாவது:


latest tamil newsபுதுடில்லிக்கு ஒவ்வொரு நாளும் 10 லட்சம் வர்த்தக வாகனங்கள் வருகின்றன. ஆனால், அவற்றிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் எம்.சி.டி.,க்கு வரவில்லை. இந்த சுங்க கட்டண ஊழலில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ., முறையாக விசாரிக்க வேண்டும் என துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், 'இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இவற்றில் உண்மை இல்லை' என, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஆக-202209:32:31 IST Report Abuse
Sampath Kumar அதாவது நமக்கு வந்தால் தான் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினி உங்க ஜி பிரதம மந்திரி நிதி என்று ஒரு நிதி திரட்டினாரே அது பற்றி சொல்ல முடியுமா? அலை கற்றை ஏலத்தில் நடந்து உள்ள ஊழலை பற்றி சொல்ல முடியுமா? கள்ள மோனம் காக்கும் ஊடகங்களின் நிலை பற்றி கேள்வி கேக்க துப்பு இருக்க??/ வீண்கன போர்வமாக தீ மு க ஊழல் செய்து விட்டது என்று கூக்குரல் இட்டவர்கள் இன்று தாய்முறியில் கொள்ளை அடித்து உள்ளார்கள் என்று சொல்ல திராணி இருக்க? பிஜேபி ஆட்சி என்பது நாஜி களின் ஆட்சி விட மோசமாக உள்ளது இதற்கு விடியல் ஆட்சி எத்தனையோ மேல்
Rate this:
11-ஆக-202212:10:43 IST Report Abuse
Gopal Sendurai கள்ள மோனம், வீண்கன போர்வமாக, தாய்முறியில் இதெல்லாம் என்ன சம்பத்து? ஏன் இப்படி தமிழை போட்டு இப்படி சித்திரவதை படுத்துற.எத்தன தடவை சொன்னாலும் ஏன் புரிஞ்சுக்கிற மாட்டேன்ற?😆...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-ஆக-202209:03:20 IST Report Abuse
Duruvesan Boss, ஆதாரம் இருந்தால் கோர்ட் ல கேஸ் போடலாம், ndtv ல குடுக்கலாம். நான் கூட சொல்றேன் உங்க govt நெறையா கொள்ளை அடிச்சிட்டாங்க, நம்பறீங்களா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-ஆக-202209:00:59 IST Report Abuse
duruvasar கடனை வாசூலிக்க ஒரு கம்பனி மீது கிளைம் போடும் போது அந்த கம்பனி கிளைம் போட்டவர்மீது பதிலுக்கு கவுண்டர் கிளைம் போடும். அப்போதான் வழக்கை நீடிக்கலாம். அந்த யுக்தி தான் இது. லிக்கர் மீதான கலால் வரியில் மாநில அரசு ஊழல் செய்திருக்கிறது என கவர்னர் சிபிஐ விசாரணை க்கு உத்தரவு இட்டிருகிரார். எனவே இந்த எதிர் வினை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X