உலக தரத்தில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை: மணற்பரப்பை தூய்மையாக பராமரிக்க உத்தரவு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னையிலுள்ள மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளின் மணல் பரப்பை, தினமும் இருவேளையும் சுத்தப்படுத்தி, புதுப்பொலிவுடன் பராமரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 10 பேர் குழுவையும் மாநகராட்சி அமைக்க உள்ளது. மேலும், பெசன்ட் நகர் கடற்கரையை சீரமைக்க, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக மெரினா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னையிலுள்ள மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளின் மணல் பரப்பை, தினமும் இருவேளையும் சுத்தப்படுத்தி, புதுப்பொலிவுடன் பராமரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 10 பேர் குழுவையும் மாநகராட்சி அமைக்க உள்ளது. மேலும், பெசன்ட் நகர் கடற்கரையை சீரமைக்க, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.latest tamil news
சென்னை மாநகராட்சியில் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகள் உள்ளன.இங்கு, சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் என அதிகமானோர், சுற்றுலா வந்து செல்கின்றனர். மேலும், உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை என்ற அந்தஸ்தை, மெரினா கடற்கரை பெற்றுள்ளது.

இதனால், மாநகராட்சி நிர்வாகம் கடற்கரையில், உலக தரத்திற்கு ஏற்ப மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், மெரினா கடற்கரை பகுதியில் சிறுவர் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், ரோப் கார் உள்ளிட்ட சுற்றுலா பயணியரை அதிகம் கவரும் வகையிலான வசதிகளை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மெரினா கடற்கரை பகுதிகளில், மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருவதால், மேம்பாட்டுப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டு உள்ளன.அதேநேரம், பெசன்ட் நகர் கடற்கரையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர், நேற்று முன்தினம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நிலையிலுள்ள கடற்கரை பகுதிகளை சீரமைக்கவும், மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், புதிதாக பணிகள் ஏதும் துவங்க வாய்ப்பில்லை. அதே நேரம், பட்டினப்பாக்கம் லுாப் சாலை மீனவர்களுக்காக, 12 கோடி ரூபாய் செலவில், நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை ரசிக்கும் வகையில், அவர்களுக்கான நிரந்தர பாதை, ௧ கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.


latest tamil news
மேலும், மெரினா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள், தனியார் பராமரிப்பில் விடப்பட உள்ளன. அதேபோல், கடைகள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், மணற்பரப்பை காலை மற்றும் மாலை என, இரண்டு வேளையும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.இதற்காக 10 பேர் குழுவும் நியமிக்கப்பட உள்ளது.

பேசன்டர் நகர் கடற்கரையை பொறுத்தவரையில், அங்கு பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, அங்குள்ள கழிப்பறைகள் இடிக்கப்பட்டு தெற்கு, வடக்கு என்ற அடிப்படையில், இரண்டு கழிப்பறைகள் அமைக்கப்படும். இதில், வடக்கு பகுதியில், குளியலறை வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும், சிறுவர் பூங்காவில் உள்ள உபகரணங்கள், நடைபாதைகள், இருக்கைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அவற்றையும் சீரமைப்பதுடன், மணற்பரப்பை சுத்தம் செய்யும் பணியும் தினசரி நடைபெறும்.கடைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு, அங்குள்ள மரக்கட்டைகள் அகற்றப்படும். பெசன்ட் நகர் கடற்கரையில் சீரமைப்பு பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த இரண்டு கடற்கரைப் பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்தாலும், பொதுமக்கள் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும்.எனவே, கடற்கரையை சுத்தமாக பராமரிக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை


மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, சுகாதார அதிகாரிகள், காலை, மாலை வேளைகளில், கடற்கரையில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பறிமுதல் செய்கின்றனர்.

இந்த வகையில், நான்கு நாட்கள், 1,391 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 61 கடை உரிமையாளர்களிடம் இருந்து, 71 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெசன்ட் நகர் கடற்கரையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இரு நாட்களுக்கு முன் திடீர் ஆய்வு செய்தார்.

இங்கு நடைபெறும் துாய்மை பணிகள், கடைகளில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை குறித்து, மண்டல அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி வியாபாரம் செய்தால், அபராதம் விதிப்பதுடன் கடை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும்' என, கடை உரிமையாளர்களுக்கு, கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
11-ஆக-202218:27:45 IST Report Abuse
RaajaRaja Cholan போடுங்க தலைவா , ரோப் கார் மெரினாவில் இருந்து ஸ்ரீ இலங்கை , மலேஷியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு , ஒப்பந்தம் போட்டு பணம் சம்பாதிப்போம் , பிறகு கடல் அலை நின்ற பிறகு பணிகள் தொடரும் என்று சொல்லி விடலாம் ,. யாரும் கேட்டால் கடல் அலையை நிக்க சொல்ல்லுங்க நாங்க ரோப் கார் ஸ்ரீ இலங்கை , மலேஷியா சிங்கப்பூர் நாடுகளுக்கு இணைப்பு போடுகிறோம் என்று சொல்லலாம் பல லட்சம் கோடி சம்பாதிக்கலாம் தைலவா , சின்ன தத்தி யை அந்த நிறுவனத்திற்கு தலைவர் ஆக்கி விடலாம்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
11-ஆக-202218:24:21 IST Report Abuse
RaajaRaja Cholan மணலை சல்லி வைத்து அரிப்பார்களோ ? , தத்தி மைண்ட் வாய்ஸ்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-ஆக-202214:28:35 IST Report Abuse
r.sundaram இன்னமும் ஒரு பத்து கல்லறைகளை பெரிசு பெரிசாக கட்ட சொல்லுங்கள், அதன்பின் உலகத்தின் மிகப்பெரிய கல்லறை தோட்டம் என்ற பெயர் மெரீனாவுக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X