பெட்டிசன் அனுப்புறதை நிறுத்துங்க: தி.மு.க.,வினருக்கு அமைச்சர் புத்திமதி| Dinamalar

'பெட்டிசன்' அனுப்புறதை நிறுத்துங்க: தி.மு.க.,வினருக்கு அமைச்சர் புத்திமதி

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (4) | |
கோவை: ''மற்றவர்கள் மீது குறை சொல்லி, 'பெட்டிசன்' அனுப்புவதை முதலில் நிறுத்துங்கள்,'' என, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி, மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கோவையில் நடந்தது. அதில், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை: ''மற்றவர்கள் மீது குறை சொல்லி, 'பெட்டிசன்' அனுப்புவதை முதலில் நிறுத்துங்கள்,'' என, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.



latest tamil news




முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி, மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கோவையில் நடந்தது. அதில், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:

இளைஞரணியில் நிறைய பேர் பொறுப்பு இல்லாமல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும்; அங்கீகாரம் வழங்கப்படும்.கரூரில், 4 தொகுதிகளே இருக்கின்றன. அங்கு, 18 ஆயிரத்து, 594 நிர்வாகிகள் உள்ளனர். கோவையில், 10 தொகுதிகள் இருக்கின்றன; அதற்கேற்ப பொறுப்புகளை உருவாக்க வேண்டும். மற்ற மாவட்டங்களை விட, கோவையில் இளைஞரணியில் அதிகமானோரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

கரூரில் எனக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணியினர். அவர்களை நம்பி, பொறுப்பு ஒப்படைப்போம். தேர்தல் பணி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அனுப்புவர். அதுதொடர்பான கட்டமைப்பை கோவையில் உருவாக்க வேண்டும்.


latest tamil news




ஒருத்தர் மீது ஒருத்தர் குறை சொல்வதை விடுங்கள். இன்னொருத்தரை குறை சொல்லி, லெட்டர் அடிப்பதை முதலில் விடுங்கள். அதை நிறுத்தினால் மட்டுமே நாம் வளர்ச்சி பெற முடியும்.வார்டு தேர்தல் நேரத்தில், கோவையில் மனு வாங்கினேன். மனு வாங்கி முடிக்கவில்லை. அதற்குள், 'பெட்டிசன்' துாக்கிட்டு வந்துட்டாங்க. அதை, நிறுத்தினால் மட்டுமே நாம் வளர்ச்சி அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X