தனிநபர் வருவாய் அதிகரிப்பு; கவர்னர் தமிழிசை தகவல்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் தனி நபர் வருமானம் 0.42 சதவீதம் உயர்ந்துள்ளது' கவர்னர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாம் கூட்டத் தொடரை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை உரையின் முக்கிய அம்சங்கள்:புதுச்சேரி அரசு, 'பொருளாதார வளர்ச்சியே வாழ்வாதார வளர்ச்சி' என்ற வகையில், செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-22 நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.10,414



புதுச்சேரி-'புதுச்சேரி மாநிலத்தில் தனி நபர் வருமானம் 0.42 சதவீதம் உயர்ந்துள்ளது' கவர்னர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாம் கூட்டத் தொடரை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை உரையின் முக்கிய அம்சங்கள்:புதுச்சேரி அரசு, 'பொருளாதார வளர்ச்சியே வாழ்வாதார வளர்ச்சி' என்ற வகையில், செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-22 நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.10,414 கோடியில், ரூ.9,793.29 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் 94.04 சதவீதமாகும். இது. கடந்த நான்காண்டுகளில் செய்த செலவினத்தை விட அதிகம். மேலும், வருவாய் இலக்கில் 104 சதவீதம் என்ற உயர்ந்த சாதனையை நாம் அடைந்துள்ளோம். நிர்ணயித்த கடன் வரம்பை மீறாமல், கடன் வாங்கும் ஆதாரத்தை முடிவு செய்யும் இணக்கத்தை மத்திய அரசு நமக்கு வழங்கி உள்ளது. இது, குறைந்த வட்டியில் முழுக்கடன் பெற உதவியாக உள்ளது.மாநில பொருளாதாரத்தின் முழுமையான மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை தீர்மானிக்க தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தி பயன்படுகிறது. மாநிலத்தில் கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.38,285 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2020-21 நிதியாண்டை விட 2.90 சதவீதம் கூடுதல். தனிநபர் வருமானம் ரூ.2,15,583ல் இருந்து 2,16,495 ஆக உயர்ந்துள்ளது. இது 0.42 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X