சிறுவாணி தண்ணீர் வெளியேற்றம்: 41.39 அடியாக நீர் மட்டம் சரிவு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை: சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றுவதால், 41.39 அடியாக நீர் மட்டம் சரிந்தது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை அமைந்துள்ள இடங்களில் தொடரும் மழைப்பொழிவால், நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால், அம்மாநில நீர்ப்பாசனத் துறையினர், மதகுகளை திறந்து, தண்ணீரை வெளியேற்றி

கோவை: சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றுவதால், 41.39 அடியாக நீர் மட்டம் சரிந்தது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை அமைந்துள்ள இடங்களில் தொடரும் மழைப்பொழிவால், நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால், அம்மாநில நீர்ப்பாசனத் துறையினர், மதகுகளை திறந்து, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம், 176 மி.மீ., மழை பெய்ததால், 170 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையிலும், அடிவாரத்திலும் தலா, 62 மி.மீ., மழை பதிவாகி இருக்கிறது.



latest tamil news




மழை வேகம் சற்று குறைந்திருப்பதால், மதகு திறப்பு, 90 செ.மீ., உயரத்துக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருவதால், 43 அடியாக இருந்த நீர் மட்டம், 41.39 அடியாக சரிந்திருக்கிறது. இது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மலை பகுதியில், மழையின் வேகம் மற்றும் காற்றின் சுழலுக்கு மரக்கிளைகள் ஒடிந்து தண்ணீரில் மிதந்து வருவதால், நீர் வழித்தடத்தில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, 8.12 கோடி லிட்டரே நேற்று எடுக்கப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202207:14:45 IST Report Abuse
N Sasikumar Yadhav இந்த நீர்குறைப்பிற்கு கேரள முதல்வர் பிரனாய் விஜயனின் அகில உலக தலைமை ரசிகமன்ற தலைவரான திரு ஸ்டாலினார் பதில் சொல்ல வேண்டும்
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
11-ஆக-202212:36:55 IST Report Abuse
 Ganapathy Subramanian "இது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது" - நம்மிடம் இருக்கும் நீர் சேகரிப்பு மற்றும் ஏரி, குளம், குட்டை எல்லாவற்றையும் ஆட்டையை போட்டாயிற்று. இருப்பதை தூர் வாரி நீர் சேகரிப்பை அதிகப்படுத்துகிறோம் என்று சொல்லி ஊழல் செய்து காசையும் அடித்தாயிற்று. கேரளாவையும் கர்நாடகாவையும் குறை சொல்லியே காலத்தை ஓட்டுகின்றோம். நாம் என்றைக்கு மக்களுக்கு நன்மை செய்வோம், நம்முடைய மாநிலத்திலேயே முடிந்தவரை தன்னிறைவு என்பதை என்று யோசிக்கப்போகிறோமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X