நிலத்தடி நீர்மட்டம் சரிவு: ஏரிகளில் நீர் கையிருப்பால் பற்றாக்குறை இருக்காது!| Dinamalar

நிலத்தடி நீர்மட்டம் சரிவு: ஏரிகளில் நீர் கையிருப்பால் பற்றாக்குறை இருக்காது!

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (6) | |
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம், ஒரு அடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும் போது, 6 அடி உயர்ந்துள்ளது.குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.210

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம், ஒரு அடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும் போது, 6 அடி உயர்ந்துள்ளது.

குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




latest tamil news





210 நீர்நிலைகள்


மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால், நிலத்தடியில் போதிய நீர் தங்குவதில்லை.விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில் ஏரி, குளங்கள் பெரிய அளவில் இல்லை. 2011ம் ஆண்டு விரிவாக்கத்திற்குப் பின், சென்னையைச் சுற்றி உள்ள பல ஏரி, குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தன.

இதில், 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு, கடந்த ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. கால்வாய், வடிகால் கட்டமைப்புகளும் சீரமைக்கப்பட்டன.வடிகால் உள்பகுதி, சாலையோரம், பூங்கா என, 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையில், ஓரளவு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

சென்னை மணல், களிமண், பாறைகளால் ஆன அடுக்குகளைக் கொண்ட நிலப்பரப்பு.இதனால், நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன.சென்னையிலுள்ள 15 மண்டலங்களில், கோடை வெயில் சுட்டெரித்ததால், கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது.


நம்பிக்கை


ஜூன் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால், 6 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.இந்நிலையில், 15 மண்டலங்களில் ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம், சில மண்டலங்களில் ஒரு அடி குறைந்தது. இதில் சோழிங்கநல்லுார் உள்ளிட்ட, 8 மண்டலங்களில், 3 அடி வரை உயர்ந்துள்ளது.மணலி உள்ளிட்ட 7 மண்டலங்களில், ஒன்றரை அடி வரை குறைந்து உள்ளது.


latest tamil news




அதே வேளையில், 2021 ஜூலை மாதத்தை விட, 2022 ஜூலையில், 15 மண்டலங்களிலும் சேர்த்து நிலத்தடி நீர் மட்டம், 6 அடி வரை உயர்ந்துள்ளது.இதனால், கடந்த ஆண்டை போல், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.மேலும், ஏரிகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறையின்றி பூர்த்தி செய்ய முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் பெய்த மழையால் 6 அடியாக உயர்ந்த நீர்மட்டம், ஜூலை மாதத்தில் ஒரு அடி குறைந்து, 5 அடியாக இருந்தது. ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பருவ மழைக்கு முன் பொதுமக்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரித்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X