சிகிச்சை பாதி... அவஸ்தை மீதி: புற்றுநோயாளிகள் பரிதவிப்பு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: பாலரெங்காபுரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் வருவதால் இம்மையத்தை திட்ட கமிஷன் தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டது. இதனால் பாலரெங்காபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தரைத்தளம், முதல்தளம் அமைத்து ரூ.15 கோடி மதிப்புள்ள அதிநவீன ரேடியோதெரபி கருவி (லீனாக்) நிறுவப்பட்டது. எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டட்

மதுரை: பாலரெங்காபுரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் வருவதால் இம்மையத்தை திட்ட கமிஷன் தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டது. இதனால் பாலரெங்காபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தரைத்தளம், முதல்தளம் அமைத்து ரூ.15 கோடி மதிப்புள்ள அதிநவீன ரேடியோதெரபி கருவி (லீனாக்) நிறுவப்பட்டது. எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டட் ரேடியேஷன்' எனப்படும் இக்கருவியில் 'சுவிட்ச்' போட்டால் தான் கதிர்வீச்சு வரும் என்பதால் பாதுகாப்பானது.



latest tamil news




புதிய கருவி வாங்குவதற்கு முன்வரை மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவம், அறுவை சிகிச்சை, கோபால்ட் ரேடியோதெரபி பிரிவு செயல்பட்டு வந்தது. புதிய கருவி வந்ததும் 3 மாதங்களுக்கு முன்பாக இங்கிருந்த ரேடியோதெரபி துறை பாலரெங்காபுரத்திற்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து புற்றுநோயாளிகள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்கு மருந்துகள் போதுமா, அறுவை சிகிச்சை தேவையா, ரேடியோதெரபி கொடுப்பதா என டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து ஒரு மாதம் வரை ரேடியோதெரபி எடுக்க வேண்டும். புற்றுநோய் தொடர்பான பல்வேறு வார்டுகளில் இருந்து தினமும் 70 நோயாளிகள் வரை பாலரெங்காபுரம் மருத்துவமனைக்கு ரேடியோதெரபி சிகிச்சைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இங்கிருந்து ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்சுக்காக மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருந்து 10 நிமிட ரேடியோதெரபி சிகிச்சைக்காக தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சிலநேரங்களில் பாலரெங்காபுரம் சென்றால் ஸ்கேன், ரத்தபரிசோதனை செய்து வரச் சொல்லி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.
உள்ளூர் நோயாளிகள் வீடு திரும்பலாம். வெளியூர் நோயாளிகள் வலியுடன் ரேடியோதெரபி எடுத்துவிட்டு மீண்டும் வீடு சென்று மறுநாள் வரவேண்டும். இதனால் சோர்வடைந்து பாதிக்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனையில் 'லீனாக்' கருவி இருந்தால் வெளியூர் நோயாளிகளை வார்டில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கமுடியும். வலி, வேதனையுடன் அங்குமிங்கும் அலைவதையும் தவிர்க்க முடியும். 'லீனாக்' கருவி மட்டும் இங்கு கொண்டு வந்தால் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையமாக மாற்றிவிடலாம். மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் புற்றுநோயாளிகளின் நலனில் அக்கறை வைத்து கருவியை இடமாற்ற வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
11-ஆக-202214:32:48 IST Report Abuse
Vena Suna சரியான திட்டங்கள் வேண்டும்.மக்களுக்கு சிகிச்சைகள் இலவசமாக வேண்டும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-ஆக-202213:51:58 IST Report Abuse
மலரின் மகள் போக்குவரத்து வசதிகளை பெருக்குங்கள். அந்த இரண்டு மையங்களுக்குமான தகவல் தொடர்பை மேம்படுத்துங்கள். நோயாளிகளை ஒரு மையத்திலிருந்து அடுத்த மையத்திற்கு மாற்றும் தகவல்களை இரண்டு மையங்களும் சரியாக பரிமாற்றி ஏற்கவேண்டும். தேவை சரியான ஒருங்கிணைப்பு. இது அனைத்துலக அனைத்து அரசு நிறுவனங்களுக்குமான பொதுவான அதேநேரம் கண்டுகொள்ள விருப்பப்படாத ஒரு குறைபாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X