இந்தியாவுக்கு சிறப்பு சலுகை: அமெரிக்கா விரைவில் முடிவு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாஷிங்டன் : இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், 'காட்சா' என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.
இந்தியா, சிறப்பு சலுகை, அமெரிக்கா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வாஷிங்டன் : இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், 'காட்சா' என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.

இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடியும்.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது.


latest tamil newsஇந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க எம்.பி.,யான இந்தியாவை பூர்வீகமாக உடைய ரோ கன்னா கூறியதாவது:ஒரு பக்கம் சீனாவும் மறுபக்கம் ரஷ்யாவும் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு தொடர்வது மிக முக்கியமாகும்.அதனால் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் முடிவை, அதிபர் ஜோ பைடன் விரைவில் எடுப்பார். இதற்கு, பார்லிமென்டில், 300க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா
11-ஆக-202220:26:14 IST Report Abuse
Ramakrishnan Sitaraman அமெரிக்கா நித்திரையில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். உன்னோட சலுகை ஒன்னும் இந்தியாவுக்கு வேண்டாம்.
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
11-ஆக-202219:54:44 IST Report Abuse
Velumani K. Sundaram இந்தியாவின் ரூபே (RuPay) டிஜிட்டல் payment/transaction key அமெரிக்க டாலருக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. மிக விரைவில் visa / master card swift transaction அதிகமான நாடுகளில் RuPay மூலம் நீக்கப்படும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், அமெரிக்க டாலர் இன்டர்நேஷனல் கரேன்சியிலிருந்து நீக்கப்பட்டு, US$ பலவீனமாகும். பிறகு என்ன... அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு "NEW INDIA" நோக்கி படையெடுத்துவிடுவார்கள்... This is the period of fear for American administration.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
11-ஆக-202219:13:36 IST Report Abuse
Priyan Vadanad நமது நாடும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நிலை வந்துவிட்டதால் கொஞ்சம் கடுப்பு. அடக்கி வாசிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X