தி.மு.க.,வினர் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பாங்க... ஆனா, அ.தி.மு.க.,வினருக்கு விபரம் பத்தலை!

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட பிறகும் கூட, அதை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது நியாயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.* இதே அ.தி.மு.க., ஆட்சியா இருந்திருந்தா, தி.மு.க.,வினர் கோர்ட் அவமதிப்பு வழக்கு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட பிறகும் கூட, அதை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது நியாயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.latest tamil news

* இதே அ.தி.மு.க., ஆட்சியா இருந்திருந்தா, தி.மு.க.,வினர் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பாங்க... ஆனா, அ.தி.மு.க.,வினருக்கு விபரம் பத்தலை!அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி:
கொள்ளிடத்தில் திறக்கப்படும் உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ராசி மணலில் புதிய அணை கட்டி, தண்ணீரை தேக்கலாம். பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை. இதனால், மேட்டூரில் துவங்கி, சிதம்பரம் வரை நுாற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கின்றன.

* நீர் மேலாண்மையில் நம்ம அரசு ரொம்பவே பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி பேட்டி:
கிருஷ்ணகிரியில் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர்' என்கிறார். ஜெயலலிதா இறந்த பின், பொதுச் செயலர் பதவிக்கு யாரும் தேவையில்லை என தீர்மானம் இயற்றி விட்டு, அவரை அவமானப்படுத்தும் வகையில், பதவி வெறி பிடித்து பொதுச்செயலர் பதவிக்கு அலைந்தவர் பழனிசாமி.

* யாருக்கு தான் பதவி வெறி இல்லை... தங்களிடம் இருந்த செய்தி தொடர்பாளர் பதவியை பறித்ததால் தானே, நீங்களே பன்னீர்செல்வம் அணிக்கு வந்தீங்க?மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழக கவர்னர் ரவியை, ரஜினி சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால், 'தாங்கள் அரசியல் பேசியதாகவும், அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் ரஜினி தெரிவித்திருப்பது வித்தியாசமாக உள்ளது. கவர்னர் மாளிகை, அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல.

* தங்களது கூட்டணி கட்சியான தி.மு.க., அமைச்சர்கள் பதவியேற்ற புதிதில், கட்சி அலுவலகங்களில் அதிகாரிகள் ஆய்வு கூட்டங்களை நடத்தினப்ப, நீங்க எங்க போயிருந்தீங்க?


latest tamil news


தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் என்ற பெயரில் நடக்கும் மோசடி, ஊழல், முறைகேடு ஆகியவை ஒழிக்கப்படும் நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது. லஞ்சம், ஊழலை ஒழிக்க வழி வகுக்கிறது இந்த மசோதா. அதனால் தான், தி.மு.க., அதை கடுமையாக எதிர்க்கிறது.

* அது தானே பார்த்தோம்... ஆதாயம் பறிபோகுதுன்னு தான் தி.மு.க., விழுந்தடித்து கொண்டு இந்த மசோதாவை எதிர்க்கிறதா?புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SKANDH - Chennai,இந்தியா
11-ஆக-202215:01:54 IST Report Abuse
SKANDH அதிமுக ஆட்சின்னா திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும். திமுக ஆட்சி செயதால் அதிமுகவுக்கு விவரம் போதவில்லையா? பிஜேபி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடட்டுமே, திமுக ஆட்சியின் மீது. .
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
11-ஆக-202214:54:39 IST Report Abuse
abibabegum ஆவின் பால் பாக் கெட்டின் திக்னஸ் குறைத்து பல கோடி ஊழல் செய்கின்ற இந்த ஆட்சி மின்சாரத்தில் எதனை கோடி அடித்துள்ளார்கள் என்று அண்ணாமலைக்குத்தான் வெளிச்சம் விரைவில் வெளியே கொண்டுவாருங்கள்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-ஆக-202214:26:35 IST Report Abuse
r.sundaram அதிமுக காரர்களுக்கு உட்கட்சி பூசலை சமாளிக்கவே கோர்ட் படி ஏறி இறங்குறாங்க, அவங்களுக்கு எப்படி அகவிலைப்படி உயர்வு கொடுக்க வில்லை என்பதை தெரிந்துகொள்ள நேரம் இருக்கும்? நேரம் இருந்து தெரிந்து கொண்டால் தானே கோர்ட் அவமதிப்பு போடமுடியும். இப்படியும் ஒரு எதிர்க்கட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X