இந்தியாவின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், வரும், 13 முதல், 15 வரை, தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, ஓசூர் மாநகராட்சியில், 45 வார்டுகளிலுள்ள, 85 ஆயிரம் குடியிருப்பு களுக்கு, இலவசமாக தேசியக்கொடி வழங்கும் பணியை, ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, மேயர் சத்யா துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர்
பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் நாராயணன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியில், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தேசியக்கொடியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில், 6 இடங்களிலுள்ள வரி வசூல் மையங்களிலும், மாநகராட்சி அலுவலகத்திலும், தேசியக்கொடி வழங்கப்படும் என, மாநகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி தேவைப்படும் மக்கள், தங்களது ரேஷன் கார்டுடன் வீட்டின்
வரி வசூல் ரசீதை கொண்டு வந்து,
தேசியக்கொடியை பெறலாம் என,
மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.