தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வது குறைந்ததால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 3,066 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 2,091 கன
அடியாக குறைந்தது. அணையிலிருந்து வாய்க்கால் மற்றும் தென்பெண்ணை ஆற்றில், 1,856 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த
உயரமான, 52 அடியில் நேற்று, 49.40 அடியாக நீர்மட்டம் இருந்தது.
கடந்த, 6 நாட்களுக்கு முன்பு அணையிலிருந்து வினாடிக்கு, 8,160 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை பூங்காவிற்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சென்றது. இதனால் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை பெய்வது குறைந்து, நீர்திறப்பும் குறைக்கப்பட்டதால், நேற்று முதல் (ஆக., 10) சுற்றுலா பயணிகள், அணைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.