சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அறிவியல் சில வரிச் செய்திகள்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
நினைவாற்றலுக்கு ஆபத்தா?வேண்டியவர்களின் மொபைல் எண்களைக்கூட நினைவில் வைக்காமல், 'டிஜிட்டல்' கருவிகளிடம் நினைவாற்றலை குத்தகைக்கு விட்டுவிட்ட தலைமுறை வந்துவிட்டது. இது கெடுதலா? இது நல்லதுதான் என்கிறது லண்டன் பல்கலைக்கழகத்தினர் செய்த ஆய்வு. சில வகை தகவல்களை, கருவிகளின் நினைவகத்தில் வைப்பதால், நம் மூளைக்கு சுமை குறையும். இதனால் அந்த இடம் வேறு வகை தகவல்களை
அறிவியல் சில வரிச் செய்திகள்


நினைவாற்றலுக்கு ஆபத்தா?



வேண்டியவர்களின் மொபைல் எண்களைக்கூட நினைவில் வைக்காமல், 'டிஜிட்டல்' கருவிகளிடம் நினைவாற்றலை குத்தகைக்கு விட்டுவிட்ட தலைமுறை வந்துவிட்டது.

இது கெடுதலா? இது நல்லதுதான் என்கிறது லண்டன் பல்கலைக்கழகத்தினர் செய்த ஆய்வு. சில வகை தகவல்களை, கருவிகளின் நினைவகத்தில் வைப்பதால், நம் மூளைக்கு சுமை குறையும்.

இதனால் அந்த இடம் வேறு வகை தகவல்களை கூடுதலாக நினைவில் வைக்க பயன்படும் என்பதோடு, மூளைத் திறனும் கூடும் என்கிறது அந்த ஆய்வு.


கிருமி விரட்டும் செம்பு



மீண்டும் சர்வதேச அளவில் தொற்றுக்கள் பரவுவதால், செம்பு உலோகத்திற்கு மீண்டும் மவுசு திரும்புகிறது. செம்பின் மூலக்கூறுகள், கிருமிகளை செயலிழக்கச் செய்வதை அறிவியல் உறுதி செய்துள்ளது.

எனவே தான், கனடாவில், வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில், பலரும் தொடக்கூடிய பொருள் தள்ளு வண்டிகள், கதவுக் கைப்பிடிகள், குடிநீர் குழாய்கள் போன்றவற்றுக்கு செம்பு பூச்சு செய்துள்ளனர்.

இதனால் கிருமிகள் பரவுவது கணிசமாகக் குறையும் என நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சீறிப்பாயும் சுரங்க ரயில்



ஜெட்டைவிட வேகம். ஆனால், அதன் கட்டணத்தில் பாதிதான்! கனடாவில், மணிக்கு 1,200 கி.மீ செல்லும், 'டிரான்ஸ்பாட் பிளக்ஸ் ஜெட்' என்ற சுரங்க ரயிலுக்கான கட்டுமானம் துவங்கியுள்ளது.

கல்காரி-எட்மண்டன் நகர்களுக்கிடையே 300 கி.மீ., தொலைவை டிரான்ஸ்பாட் ரயில் 45 நிமிடத்தில் எட்டிவிடும். சுரங்கப் பாதை காற்றில்லா வெற்றிடமாக இருப்பதால், இந்த வேகம் சாத்தியம் என டிரானஸ்பாட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பேச்சில் பிழை



'பேஸ்புக்'கின் தாய் நிறுவனமான 'மெட்டா' செயற்கை நுண்ணறிவு கொண்ட 'பிளெண்டர்பாட் - 3' என்ற உரையாடல் மென்பொருளை வெளியிட்டது. இது மனிதர்களுடன் இயல்பாக உரையாடும்.

அண்மையில், சில உரையாடல்களில் அது, யூதர்களுக்கு எதிரான கருத்துகளை கசியவிட்டது. பின், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றது டொனால்டு டிரம்ப் தான் என்றது.

பிளெண்டர்பாட்- 3, 0.16 சதவீதம் அளவுக்கு பிழைகள் செய்யும் என மெட்டா அறிவித்திருந்தது. பயனாளிகளின் புகார்கள் வந்தால், பிழைகள் களையப்படும்.


படியேற்றமும் மூளையும்



வயது ஆகும்போது, மூளையில் செல்களின் பெருக்கம் குறையும். இதனால், மூளையின் அளவும் குறையத்துவங்கும். இந்த மூளைக் குறைவை தடுக்க வழி இல்லையா? இருக்கிறது; படியேறுங்கள். ஆம், வாடிக்கையைவிட சற்றே கூடுதலா உடலை வருத்தி பயிற்சி செய்தால் போதும். மூளை மீண்டும் வளரும் என ஜெர்மானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ இதழான 'நியூராலஜி'யில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, தினமும் மாடிக்கு லிப்டில் போவதற்கு பதிலாக, படியேறி இறங்கினாலே மூளை வளரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X